dinamalar telegram
Advertisement

குன்னூரில் விபத்திற்குள்ளான எம்ஐ-17 வி 5 ஹெலிகாப்டர்

Share
குன்னுார்: குன்னூர் அருகே , முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்று விபத்திற்குள்ளான ஹெலிகாப்டர், ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட எம்ஐ-17 வி 5 ரகத்தை சேர்ந்தது ஆகும்.


கோவையில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. இதில், பயணித்த முப்படைத்தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களின் உடல்கள் உள்பட 10 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை. மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News




விபத்துக்குள்ளான எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் குறைந்த தொலைவில் வீரர்களையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. இதில் 36 பேர் வரை பயணிக்கலாம். ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் 4 டன் எடை வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாகும். இந்த எம்ஐ-17வி5 ரக ஹெலிகாப்டர் மணிக்கு 260 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காகவும் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • S Bala - London,யுனைடெட் கிங்டம்

    கிளம்பியது கோவையில் இருந்து. நாள் டிசம்பர் 6-லிருந்து இரண்டு நாள் கழித்து. இறந்தவர் இந்த நாட்டின் இராணுவங்களின் தளபதி. இந்த வகை ஹெலிகாப்டர் மிக மிக பாதுகாப்பானது. வெறும் மேக மூட்டத்தால் வழி தவறுவது கிடையாது. தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது ஆராய வேண்டிய விஷயம்.

Advertisement