dinamalar telegram
Advertisement

நாங்கள் தான் உண்மையான காங்கிரஸ்: திரிணமுல்

Share
கோல்கட்டா: காங்கிரஸ் ஒரு தெம்பில்லாத கட்சி; பார்லிமென்டில் முக்கிய எதிர்க்கட்சி செய்ய வேண்டியதை செய்ய அக்கட்சி தவறி விட்டதாக தெரிவித்துள்ள திரிணமுல் காங்கிரஸ், நாங்கள் தான் உண்மையான காங்கிரஸ் எனவும் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக திரிணமுல் காங்கிரசின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'ஜகோ பங்களா'வில் எழுதப்பட்ட தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மே.வங்கத்தில் பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் தான் வெற்றிகரமாக எடுத்து சென்றது. பா.ஜ.,வின் விஷம் பல மாநிலங்களில் பரவி உள்ளது. அந்த மாநிலங்களில் திரிணமுல் நுழைந்து வருகிறது.




காங்கிரஸ் தான் முக்கிய எதிர்க்கட்சி. ஆனால், அக்கட்சியால் பா.ஜ.,வை தடுக்க முடியவில்லை.
காங்கிரஸ் தெம்பில்லாத கட்சியாகவும், சோர்ந்து போயும், உட்கட்சி மோதலில் தவித்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சி பணியை திரிணமுல் செய்து வருகிறது. இதனால், திரிணமுல் தான் உண்மையான காங்கிரசாக உள்ளது. இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    எல்லா கட்சிகளும் சேர்ந்து காங்கிரசை இப்படி நொக்கினால் ராகுல்ஜி என்னதான் செய்வார்? ஒரு ட்வீட் போட்டுவிட்டு லண்டன் மாநகர் செல்வார் சென்று சொல்வது எங்கள் காதில் விழுகிறது.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    மஹாத்மா காந்திலேந்து காங்கிரஸ் இப்போ 'மம்தா' காங் .ஆகிவிட்டது மக்கள் இன்னும் அதிகமாக தூங்க ஆரம்பய்து விட்டார்கள் இதுவே தேசபற்றில்லாத கட்சிகள் தமிழகத்தைப்போல பிற மாநிலங்களிலும் பரவ தொடங்கியதற்கான காரணம் .

  • sankar - Nellai,இந்தியா

    புலியை பார்த்து சூடு போடும் பூனை

  • bal - chennai,இந்தியா

    இந்த அம்மணியை வளர விடாதீர்கள்...கொம்யூனிஸ்ட்க்கும் இதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை..இந்த அம்மை நல்ல மனிதர்களை அவமான படுத்தியவர்.. ரத்தன் டாடா மாதிரி மனிதர்களை தொழில் நடத்த விட வில்லை.. அந்த நிலங்கள் அபேஸ் பண்ணியவர்.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    கம்யூனிஸ்ட்களை தூக்கி நிறுத்தி தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏற்ற வருகிறார் நவீன லெனின் நவீன காஸ்ட்ரோ பேராசிரியர் என்னும் சிறியாசிரியர் M அருணன் அவர்கள். பராக் பராக்.

    • பேசும் தமிழன் - ,

      அய்யா நீங்கள் ஏன் அவரை வம்புக்கு இருக்கிறீர்கள்.... அவரே நேர்காணலில் சீமானிடம் வாங்கி கட்டியதில் இருந்து பேய் பிடித்தது போல் இருக்கிறார். இப்படி கிண்டல் செய்தால் அவர் செய்யும் சேவையை (ஒன்றும் செய்வது இல்லை அது வேறு) சீனாவில் போய் செய்ய முடிவெடுத்து விட்டால். தமிழ்நாடு என்ன செய்யும். இந்தியா தான் தாங்குமா???

Advertisement