dinamalar telegram
Advertisement

சாமானிய மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை: சோனியா

Share

புதுடில்லி: '' விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை'' என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் பார்லிமென்ட் குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சோனியா பேசியதாவது: எல்லை விவகாரம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என காங்., வலியுறுத்தும். நாகலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதாது. அவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


ராஜ்யசபா எம்.பி.,க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அராஜகமானது. இதற்கு முன்னர் அவ்வாறு நடந்தது இல்லை. இந்த நடவடிக்கை அரசியல்சாசனம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது. குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும்.



தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து வருவதால், ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டிற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் குறித்து மோடி அரசு அக்கறையில்லை. இவ்வாறு சோனியா பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

  • பேசும் தமிழன் -

    இவர்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடி... சாமானிய மக்கள் அனைவரும் கோடிஷ்வரர்கள் ஆக இருந்தார்கள்... வந்துட்டாங்க குறை சொல்ல... உங்கள் ஆட்சியின் போது... சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தையும் கமிசன் என்ற பெயரில் கொள்ளை அடித்தவர்கள் தானே நீங்கள்????

  • bal - chennai,இந்தியா

    இதற்கு பேசுவதற்கே யோக்கியத கிடையாது..பயனுக்கு அறிவுரை சொல்லவும்.

  • bal - chennai,இந்தியா

    உங்க கட்சி தலைவர்கள் மீதே மரியாதை இல்லை உனக்கு.. ஏழைகளை கொள்ளை அடித்த கட்சி காங்கிரஸ் மற்றும் திமுக.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    இந்த அம்மா ஏன் பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. ஓஹோ பேச முடியாததால் படிப்பார். சபாநாயகர் paper பார்த்து படிக்கக்கூடாது என்று நிறுத்தி விடுவார்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    சாமானிய மக்களிடம் அக்கறை இவளுக்கு எப்போ வந்தது ?

Advertisement