dinamalar telegram
Advertisement

பஸ் படிககட்டில் தொங்கிட்டுப் போனால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை

Share
சென்னை: ''அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அரசு பஸ்களில் தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பஸ்ஸில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பஸ்களை இயக்க வேண்டும்.
பஸ்சில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் படிகட்டிகளில் நின்று பயணம் செய்யாதவாறு டிரைவர், கண்டக்டர் பணியாற்ற வேண்டும். மாணவர்கள், மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் பஸ்களை இயக்க ஏதுவாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்கவும், உயிரிழப்பை தடுக்கவே போக்குவரத்துதுறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கண்டக்டர் கூறும் அவுரையை கேட்டு அதன்படி பஸ்சில் ஏறி, இறங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (27)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    மாணவர்களின் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மட்டுமாவது இருக்கை வசதியே இல்லாத சில பேருந்துகளை இயக்கினால் என்ன?

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தருதலைப்பசங்கள ஒவ்வொத்தெனா லாடெங்க்கெட்டினாக்கா சரியாய்டுவானுங்க

  • Mrs. Marie-Thérèse Evariste - Paris,பிரான்ஸ்

    @Nalla, Singapore, India ... do you think your idea will be successful ? How long would it take for the youngesters to break the doors & locks ? Thus, another crores of waste of money to the Government / Private tranport companies ? India is not like Singapore, America or any CEE Countries

  • Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா

    காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தை ஒரு நடத்துனரால் முடியும் என்று கூறும் அதிகாரவர்க்கத்தினர் அறிவை பாராட்ட வேண்டும்.

Advertisement