dinamalar telegram
Advertisement

கோவிட்டால் பாதிக்கப்பட்டு 93,733 பேருக்கு சிகிச்சை: 555 நாட்களில் குறைவு

Share
புதுடில்லி: கடந்த 555 நாட்களில் இல்லாத வகையில், கோவிட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 93,733 ஆக குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,46,56,822 ஆனது. தொடர்ந்து 12வது நாளாக தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது. அதேபோல், தொடர்ந்து 164 நாட்களாகவும் தினசரி பாதிப்பும் 50 ஆயிரத்திற்கு கீழ் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 3,46,56,822 ஆனது.
மேலும் 9,525 பேர் கோவிட்டில் இருந்து குணமடைந்தனர். இதனால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,40,89,137 ஆன அதிகரித்தது.கோவிட்டில் இருந்து மீள்பவர்கள் விகிதம் 98.36 சதவீதமாக உள்ளது. கடந்த 2020 மார்ச் க்கு பிறகு இந்த சதவீதம் அதிகம் ஆகும்.கோவிட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 93,733 ஆனது. இது கடந்த 555 நாட்களில் மிகக்குறைவான எண்ணிக்கை ஆகும். நேற்று 195 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்ததால், இறந்தவர்கள் எண்ணிக்கை 4,73,952 ஆனது.

இந்தியாவில் இதுவரை 129.5 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement