dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க.,வை கிண்டல் செய்யும் அருகதை காங்கிரசுக்கு இல்லை....

Share
தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை:அ.தி.மு.க.,வுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன... உரிமையாளர், பா.ஜ., ஒருவர் மட்டுமே!

அ.தி.மு.க.,வை கிண்டல் செய்யும் அருகதை காங்கிரசுக்கு இல்லை. ஏனெனில், அக்கட்சிக்கு நிரந்தர தலைமையே கிடையாதே!

அ.தி.மு.க., செய்தித்துறை முன்னாள் அமைச்சர் ராஜு பேட்டி: அ.தி.மு.க.,வில் இனி ஒற்றைத் தலைமை இல்லை. அதுபோல, சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை.

அ.தி.மு.க.,வில் இப்போது ஏற்பட்டுள்ள ஒற்றுமை, ஜெ., காலத்தில் கூட இருந்ததில்லை என்கின்றனர். தொடரட்டும் இந்த சாதனை!

அரசு போக்குவரத்துக் கழக பென்ஷனர் நல சங்க தலைவர் கதிரேசன் பேட்டி: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு, கடந்த 74 மாதங்களாக, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின், மற்ற ஓய்வூதியர்களுக்கு அறிவிப்பது போல, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகங்கள் பலவற்றில், பல ஊழியர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், ஓய்வூதியவர்கள் நிலைமை கஷ்டம் தான்!

தமிழக பா.ஜ., பொறுப்பாளர், சி.டி.ரவி அறிக்கை:
நாட்டு மக்களில் தகுதி வாய்ந்த, 50 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சாதனையை பாராட்ட, எதிர்க்கட்சிகளில் யாருக்கும் மனம் வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு கொண்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகளில் காங்., தலைவர் ராகுல், தடுப்பூசி போட்டதாகவே தெரியவில்லை. பிறகு எப்படி அவரும், அவரின் கூட்டாளிகளும் பாராட்டுவர்?

த.மா.கா., தலைவர், ஜி.கே.வாசன் அறிக்கை: இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலால், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை மாறி, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதுகாப்பாக வேண்டும்.

இந்த விவகாரத்தில் நாடுகள் தலையீடு இன்றி, இரு நாட்டு மீனவர்கள் பேசினால் தீர்வு நிச்சயம்!

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் மாதிரி, சட்ட மேதை அம்பேத்கரை வைத்து வியாபாரம் செய்ற கட்சி, பா.ஜ., இல்லை.

இப்படி, பட் படாரென பேட்டி கொடுக்க, தமிழக, பா.ஜ.,வில் எச்.ராஜாவுக்கு அடுத்தது அண்ணாமலை தான் என்பதில் எதிரணியினருக்கு சந்தேகமே வராது!Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (22)

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  தரித்திரம் பிடித்தவர்கள் காங்கிரசில் நிறைய இருக்கும் பொது எப்படி தளவிற்கள் கிடைப்பார்கள். இந்த ஒட்டடை குச்சிக்கு தலைவர் பதவி கொடுத்தால் அது எவனையாவது இழுத்து கொண்டு ஓடிவிடும்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  ஜோதிமணி அவர்களே கிண்டல் அருமை....அருமை.....ஸ்பான்டேனியஸா அடிக்கிறாங்கப்பா....ஆனா, அப்படியே உங்கள் காங்கிரஸ் முகத்தையும் பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் பார்த்திருங்க.....அது உங்கள் இமேஜை வகைவகையாக காட்டும்....

 • bal - chennai,இந்தியா

  இந்த ஜோதி...ஜோதியின் பெயரை கெடுக்குது...

 • Milirvan - AKL,நியூ சிலாந்து

  இத்தாலிக்கார உரிமையாளரிடம் யாசகம் பெற்று வயிறு வளர்க்கும் பச்சோந்தி பாரத பிஜேபியை பற்றி பேசுவதற்குக்கூட அருகதையில்லாத நபர்.

 • Visu Iyer - chennai,இந்தியா

  அரசியலில் இருப்பதற்கு அதிமுகவுக்கே அருகதை இல்லையே..

Advertisement