dinamalar telegram
Advertisement

உச்சம் தொடும் முருங்கை விலை; கிலோ ரூ.300க்கு விற்பனை

Share
சென்னை: மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் காய்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 1 கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையானது.சென்னை கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது.கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறி காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வரத்து குறைந்து, காய்கறி விலை அதிகரித்தது.


கடந்த மாதம் முதல், வரத்து குறைந்து தக்காளி தொடர்ந்து 100 ரூபாய்கு மேல் விற்பனையானது. சென்னைக்கு, 1,110 டன் தக்காளி தேவையுள்ள நிலையில், நேற்று, 650 டன் மட்டுமே வந்தது. இதனால், கிலோ 90 -- 100 ரூபாய்க்கு விற்பனையானது.அதேபோல், பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சென்னைக்கு முருங்கைக்காய் வரத்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, முருங்கைக்காய் சீசன். தற்போது, சீசன் இல்லாத காரணத்தால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.தற்போது, குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து மட்டுமே முருங்கைக்காய் வரத்து உள்ளது. இதில், மஹாராஷ்டிராவில் இருந்து, 500 கிலோவும், குஜராத் இருந்து, 6 டன் முருங்கைக்காயும் வந்துள்ளது.


சீசன் காலங்களில், தினமும் 10 லாரி வரத்து இருந்த இடத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும், முருங்கைக்காய் வரத்து உள்ளதால், மஹாராஷ்டிரா முருங்கைக்காய் கிலோ 270 -- 300 ரூபாய்க்கும், குஜராத் 160 -- 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'முருங்கைக்காய் சீசன் முடிந்ததால், வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது. 'குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து, ரயிலில் முருங்கைக்காய் வருகிறது' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Intha samayathil paakiyaraaj magan murungaikaai chips cinimaa velividukiraar

 • Saai Sundharamurthy A.V.K -

  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட மழை, வெள்ளம் வாட்டுகிறது. அந்த மாநிலங்களில் இதுவரை காய்கறி விலை எறவில்லை. இத்தனைக்கும் இங்கிருந்து அண்டை மாநிலங்களுக்கும் காய்கறிகள் செல்கின்றன. அங்கெல்லாம் ஏறாத காய்கறி விலை தமிழகத்தில் மட்டும் தான் ஏறியிருக்கிறது. புரோக்கர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து அதில் ஒரு பகுதியை கமிஷனாக திராவிட குடும்பங்களுக்கு அனுப்புவதாக செய்தி. விடியல் ஆட்சியின் சாதனையை பாருங்கள்!!!

 • pattikkaattaan - Muscat,ஓமன்

  முருங்கைக்காய் தினமும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? உங்கள் வீடுகளில் ஒரு முருங்கை மரம் வளருங்கள்.. எங்கள் வீட்டில் இருக்கு.. பிரச்சினை என்னனா நமக்கு வேண்டிய சமயத்தில் அது காய்க்காது.. தேவையில்லா சமயத்தில் மரம் முழுசும் காய்ச்சு தொங்கும் ..

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

   இந்த மாதிரி கருத்து எழுதினால் இருநூறு ஊவாய் கொடுப்பார்களா ? அப்போ அதுக்காக தான் அப்படி எழுதறீங்களோன்னு சந்தேகம் வருது ...

 • அப்புசாமி -

  மழைப் பொழிவைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசும், மாநில அரசும் படுதோல்வி. எல்லோரும் புறநானூறு பேசவும், புது விடியல் தர்ரோம்னு சொல்லவும்தான் லாயக்கு.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  இந்த விலைவாசியை கண்டு பெண்களின் கண்ணில் கண்ணீர் வருவதை பார்த்துதான், தமிழக முதல்வர், அவர்களின் கவலையை போக்க தனியாக "மகளிர் டாஸ்மாக் கடை" திறக்கிராரோ... அவரின் அந்த "நல்ல என்னத்த" புரின்ஜிக்காம நாம அவர தப்பா பேசிட்டோமே...

Advertisement