dinamalar telegram
Advertisement

கொசஸ்தலை, புழல் உபரி நீரால் மணலி நாசம்; கால்வாய் கரைகளை சரிசெய்வதே தீர்வு

Share
Tamil News
மணலி, : கொசஸ்தலை, புழல் உபரி கால்வாயில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், மணலி முற்றிலும் பாதிக்கிறது. உபரி கால்வாய்களின் கரைகளை சரிசெய்தால் தான், தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.ஏழு வார்டுகள் உள்ள மணலி மண்டலம், நீர்நிலைகள் சூழ்ந்த பகுதி. இதனால் மழை, வெள்ளக் காலங்களில், மணலி பெரும் இன்னல்களை சந்திப்பது தொடர்கதையாக உள்ளது.பாதிப்பு மணலிக்கு, மழை நீரால் பெரிய பாதிப்பு கிடையாது.


மாறாக, ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் தான், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.அதன்படி, 15, 16 ஆகிய வார்டுகளை ஒட்டிச் செல்லும் கொசஸ்தலை மற்றும் புழல் உபரி கால்வாய்களில் நீர்மட்டம் அதிகரிக்கும் போது மணலிபுதுநகர், சடையங்குப்பம், பர்மா நகர், பாலசுப்ரமணியம் நகர், கவித்தென்றல் நகர்களில் கடும் சேதம் ஏற்படுகிறது. பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பினால், உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்டு, பல கி.மீ., பயணித்து நாப்பாளையம், மணலிபுதுநகர், இடையஞ்சாவடி, சடையங்குப்பம் வழியாக, புழல் உபரி நீருடன் கலந்து, எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் செல்லும்.


இதில் மணலிபுதுநகர், விச்சூர் போன்ற பகுதிகளில், கொசஸ்தலை ஆறு இணைப்பு கால்வாய்கள் வழியாக, உபரி நீர் பின்னோக்கி ஏறி, குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்து விடுகிறது.மகாலட்சுமி நகர், ஜெனிபர் நகர், இடையஞ்சாவடி, ஆகிய மூன்று இடங்களில், கரை உடைப்பு மற்றும் பலவீனம் காரணமாக, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து, பல நகர்களை திக்குமுக்காடச் செய்தது. கணபதி நகர், ஐ.ஜே.புரம், அருள்முருகன் நகர், எழில் நகர், இந்திராகாந்தி நகர் போன்ற பகுதிகள், பொன்னேரி நெடுஞ்சாலையை விட தாழ்வாக உள்ளதால், தேங்கிய மழை நீரும் வெள்ள நீரும் வெளியேறாமல், அப்படியே உள்ளது. இதற்கு, பெரிய ஈச்சங்குழி அருகே, மழை நீர் செல்லக்Kகூடிய கால்வாயை மறித்து கட்டப்பட்டிருக்கும் கன்டெய்னர் பெட்டக முனையமே காரணம் எனவும், அது பட்டா நிலம் எனவும் கூறப்படுகிறது.



தேக்கம்மணலிபுதுநகரின் பொன்னியம்மன் நகர், எம்.ஆர்.பி., நகர், காந்தி நகர், வடிவுடையம்மன் நகர் போன்ற பகுதிகளில், பலவற்றில் வடிகால் வசதி கிடையாது. ஆனால், மழை நீர் தேக்கம் இருக்காது. வெள்ள நீர் தேங்கினால், வெளியேற வழி கிடையாது. புழல் நீர் திறப்பால், கரையையொட்டிய பாலசுப்ரமணியம் நகர், கவித்தென்றல் கல்யாண சுந்தரனார் நகர் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கும். மேலும், தாழ்வான பகுதிகள் என்பதால், மழை நீர் தேக்கமும் இருக்கும். புழல் மற்றும் பூண்டி உபரி நீரால் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சடையங்குப்பம், -பர்மா நகர் கிராமங்கள் தான். காரணம், இந்த ஊரை நெருங்கும் போது, இரு நீர்வழித்தடத்திற்கும் கரையே கிடையாது. இதன் காரணமாக, அதிக உபரி நீர் திறப்பின் போது, அனைத்து குடியிருப்புகளையும் மூழ்கடித்து விடும். மணலியில், நெடுஞ்செழியன் தெரு, பலராமன் தெரு, காமராஜர் தெரு, ஜலகண்டமாரியம்மன் தெரு, அருளானந்தம் நகர் என, விரல் விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே, மழை நீர் தேக்கம் இருக்கும்.பெரும்பாலான தெருக்களில் வடிகால் வசதி உள்ளது. விடுபட்ட தெருக்களுக்கு, கொசஸ்தலை வடிநில பகுதிகளில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன.மழை நீர் பாதை எப்படி? மணலிபுதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்கும் மழை நீர், வடிகால் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேறும். மணலியில் தேங்கும் மழை நீர், இணைப்பு கால்வாய்கள் வழியாக, வடக்கு பக்கம், புழல் உபரி கால்வாயிலும், மேற்கு பக்கம், பகிங்ஹாம் கால்வாய்க்கும் செல்லும். கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீரால், மணலிபுதுநகர் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.



இதற்கு, இணைப்பு கால்வாய்கள் வழியாக பின்னோக்கி ஏறும் வெள்ள நீரே காரணம். தவிர, ஆற்றில் சில ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். முதலில், மணலிபுதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும், அனைத்து வடிகால்களையும் துார் வார வேண்டும். மேலும், விடுப்பட்ட இடங்களில், விரைவாக பெரிய அளவிலான வடிகால்கள் அமைக்க வேண்டும். ஆறுடன் இணையும் இணைப்பு கால்வாய்களுக்கு, நிச்சயம் மதகுகள் அமைக்க வேண்டும். ஆற்றங்கரை பலவீனமான, மகாலட்சுமி நகர், ஜெனிபர் நகர், இடையஞ்சாவடி கரைகளை பலப்படுத்தி உயர்த்த வேண்டும். கரைகள் இல்லாத இடங்களில், கரைகள் அமைக்க வேண்டும். இல்லாவிடில், மணலிபுதுநகர், சடையங்குப்பம், பர்மா நகர், ஒவ்வொரு வெள்ளத்திற்கும் மூழ்குவது தொடரும்.எஸ்.பெஞ்சமின், 48, ஐ.ஜே.புரம், மணலிபுதுநகர்தீர்வு என்ன?  கொசஸ்தலை ஆற்றின் கரைகள் உடைப்பு மற்றும் பலவீனமான மகாலட்சுமி நகர், ஜெனிபர் நகர், இடையஞ்சாவடி பகுதிகளில் கரைகளை பலப்படுத்த வேண்டும்.



மணலிபுதுநகருக்குள் இருந்து, கொசஸ்தலை உபரி கால்வாயுடன் இணையும் இணைப்பு கால்வாய் உட்பட அனைத்து கால்வாய்களுக்கும், எளிதில் திறந்து மூடும் அளவிற்கு மதகுகள் அமைக்கலாம்.  கொசஸ்தலையில், மணலிபுதுநகருக்கு பின்பும், புழல் உபரி கால்வாயில், ஆமுல்லைவாயில் சந்திப்பிற்குப் பின்பும், கரைகளே இல்லாததால், ஒவ்வொரு மழையின் போதும், சடையங்குப்பம் - பர்மா நகர் கடுமையாக பாதிக்கிறது. அரசு கவனித்து, ௧௦ அடி அகலம், உயரமான கரைகளை இருபுறமும் கட்டமைத்தால், எதிர்காலத்தில் இக்கிராமங்கள் தப்பும்.  திருவொற்றியூர் மேற்கை பாதிக்கும் பகிங்ஹாம் கால்வாய் உட்புகாத வண்ணம் இணைப்பு கால்வாய்களுக்கு, மதகுகள் அமைத்த நிலையில், விடுபட்ட மற்ற இணைப்பு கால்வாய்களுக்கும் மதகுகள் அமைக்க வேண்டும். தவிர, கழிவெளி நிலத்தில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கி, அந்த இடத்தை மீட்டு, மழை நீர் தேங்க வழிவகை செய்ய வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement