உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:
பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சித்திரை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு என காலங்காலமாய் கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி, எந்த அவசியமும் இன்றி தமிழ்ப் புத்தாண்டை, தை மாதம் 1ம் தேதிக்கு மாற்றி மகிழ்ச்சி அடைந்தார்.
கருணாநிதிக்கு பின், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., முன்னாள் பொதுச்செயலர் ஜெயலலிதா, சித்திரை 1ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். தற்போது முதல்வராக உள்ள கருணாநிதியின் மகன் ஸ்டாலின், தமிழ்ப் புத்தாண்டு விஷயத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பையில், 'தமிழ்ப் புத்தாண்டு' என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு இருக்கும் நிலையில், இதை கோமாளித்தனம் என்று தான் சொல்ல முடியும். ஹிந்து பண்டிகை மற்றும் வழிபாடுகளையும் மாற்றி அமைத்து, இப்படித் தான் கொண்டாட வேண்டும் என்று கூற, அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது.'இது தமிழ்ப் புத்தாண்டு; ஹிந்து புத்தாண்டு அல்ல' என்று முட்டாள்தனமாக கூற மாட்டார்கள் என நம்புகிறோம்.
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று, கோவில்களில் பூஜை செய்து பஞ்சாங்கம் படிக்கப்படும்; மக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடுவர். சர்ச் மற்றும் மசூதியில், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு ஏதும் நடப்பதில்லை. எனவே, தமிழ்ப் புத்தாண்டை மாற்றும் கோமாளித்தனத்தை, தமிழக அரசு நிறுத்த வேண்டும்.
வாசகர் கருத்து (183)
எதுக்குமே நல்ல நாள் கெட்ட நாள் பாக்கமாட்டார்கள். இதுக்கு மட்டும் அந்த நாள் இந்த நாள் பார்க்கிறார்கள்.பகுத்தறிவுக்கு வந்த சோதனை. ,தை பூசம் அன்னிக்கு ஏன் தமிழ் புத்தாண்டு நாள் என்று வைச்சுக்க கூடாது?
தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் ஆய்வாளர்கள் தமிழ் புத்தாண்டு தை திருநாள் தான் என்று கூற்று..
விடியல் ஆட்சி நடக்கிறது. தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றுவது பிறகு ஆட்சிக்கு வருபவர்கள் பழையபடி மீண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தை சித்திரை மாத பிறப்பில் மாற்றுவார்கள். இதை விட்டு உருப்படி ஆக தமிழ் மக்கள் நல்வாழ்வுக்கு விடியல் அரசு ஏதேனும் பயனுள்ளதாக செய்யலாம்
அப்பாடா கொஞ்சநாளைக்கு சங்கிகள் எவனும் தமிழக பிரச்னைகள் பத்தி பேசமாட்டான்
,கார்த்திக் திண்டுக்கல்: யுகாதி வருடபிறப்பு ( தெலுங்கு வருடபிறப்பு சந்திரன் போக்கை வைத்து கொண்டாடப்படுவது. அது பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாள் வரும். அதை சைத்ர மாதம் என்றுதான் கூறுவார்கள். தமிழ் வருட பிறப்பு சூரியன் போக்கை வைத்து, அதாவது சூரியன் என்று முதல் ராசியான மேஷ ராசியில் நுழையும் போது சித்திரை திருநாள் கொண்டாடப் படுகிறது. மலையாள விஷு இந்த நாளிலோ அல்லது அநேகமாக அடுத்த நாளிலோ கொண்டாடப் படுகிறது. அஸ்ஸாம் போன்ற மாநிலத்தில் பிகு என்று இந்நாளை கொண்டாடுவார்கள். திமுகவினர் என்று வேணாலும் கொண்டாடட்டும். விவரம் அறிந்த தமிழர்கள் சித்திரை திருநாளைத்தான் தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடுவார்கள். மேலும் அநேக காரணங்கள் உண்டு. இதெல்லாம் விவசாயிகள் சம்பத்தப் பட்ட விஷயம். பஞ்சாப் மாநிலத்திலும் அப்போது தான் கொண்டாடுவார்கள். பகலவன் மிகவும் பிரகாசமாக இருக்கும் மாதம் சித்திரை. ஆனால் நம் " பகுத்தறிவு பகலவன்கள்" பகலவன் பிரகாசமாக இல்லாத போது தான் பகலவனை கொண்டாடுவார்கள்.