dinamalar telegram
Advertisement

ஜனவரியில் புலம் பெயர்ந்த தமிழர் நாள் விழா: மஸ்தான்

Share
Tamil News
சென்னை :''புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாள் விழா, சென்னையில் ஜனவரி 12, 13ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது,'' என, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.ஜனவரி 12, 13 தேதிகளில், 'புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாள்' சென்னை, கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.இணையதளம்இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயரை பதிவு செய்ய, வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரகத்தின் nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தை, அமைச்சர் மஸ்தான் நேற்று துவக்கி வைத்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:'புலம் பெயர்ந்த உலகத் தமிழர் நாள்' விழா, 'தமிழால் இணைவோம்' என்ற பெயரில், சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.'ஓமைக்ரான்' தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடு வாழ் தமிழர் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்யும். நடவடிக்கைவெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழ் மொழி கற்க, அரசு சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் யாரும், இலங்கை செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்கள் விரும்பினால், அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரக ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், செய்தித் துறை இயக்குனர் ஜெயசீலன் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Nachiar - toronto,கனடா

  சில தசாப்தங்களாக ஓரிரு கனேடிய பல்கலைக்கழகங்களில் தமிழை பாடமாக வைத்து நடத்தும் கூத்து யாதெனில் பாட ஆசிரியர்கள் பயங்கரவாத இயக்கங்களால் தெரிந்தெடுக்கப் படுவார்கள். அவர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி கட்டாயமாக பயங்கரவாதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்களோ இல்லையோ தமிழில் முறையாக பேச எழுத தெரியுமோ இல்லையோ பாஸ் மார்க் கொடுக்க வேன்டும். இல்லாவிட்டால் ஆசிரியர்கள் பயமுறுத்தப் படுவார்கள். இந்தச் செய்திப்படி சிலர் கொடிகட்டி சம்பாதிக்கப் போகிறார்கள். சைவத்தையும் தமிழையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படியே பயங்கரவாத்தையும் மதமாற்ற சக்திகளையும் ஊழலையும் பிரிக்க முடியாது.

 • Nachiar - toronto,கனடா

  தமிழை வாழ வைத்தவர் வெகு சிலர் ஆனால் தமிழால் வாழ்ந்தவர் பல் ஆயிரம். இதுவும் அப்படிதான். இந்த நிறுவனத்தில் இருக்கும் யாருக்காவது தமிழ் பெயருண்டா தேடுகிறேன். அகத்தியர் வளர்த்த தமிழுக்கு இப்படியும் ஒரு காலம். சூரிய பகவானுக்கும் கோ மாதாவுக்கு நன்றி சொல்லும் பொங்கல் நாட்களை ஒட்டி இந்த கூத்தை அரங்கேற்றியிருப்பது ஒன்றும் தற்செயல் அல்ல. உண்மையான தமிழர்களுக்கு எதிரான ஓரவஞ்சனை. வெளிநாட்டு பயங்கர வாதிகள் மத மாற்று சக்திகள் பணம் உள்ளே வரும் என்பது மட்டும் உண்மை.

 • Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ

  வேலை இல்லாத ஒருத்தன் .........

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் யாரும், இலங்கை செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை" - உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் நிலையிலிருப்பவர்களை சிங்களர்களிடமே அனுப்பி வைக்கலாம்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  மக்கள் தண்ணீரில் தத்தளிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வத்தை விட்டுவிட்டு ஒரு பொறுப்புக்குள்ள அரசு செய்யும் காரியத்தை பாருங்கள் மக்களே

Advertisement