dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., தேர்தல் சட்டப்படி நடந்தது : ஓ.பன்னீர்செல்வம்

Share
Tamil News
சென்னை:''அ.தி.மு.க., சட்டவிதிகளின்படியே, கட்சி அமைப்பு தேர்தல் நடந்துள்ளது,'' என, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளின்படி தான், கட்சி அமைப்பு தேர்தல் முறையாக நடைபெற துவங்கி உள்ளது. முதற்கட்டமாக, ஒருங்கிணைப்பாளார், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல், கட்சி விதிப்படி, தர்மத்தின்படி நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து, அமைப்பு ரீதியான தேர்தல் அனைத்தும் நடத்தப்படும்.
இத்தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், எந்த தீர்ப்பு வந்தாலும் அதை மதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

  • george william - London,யுனைடெட் கிங்டம்

    போங்க அப்பு சிரிச்சு வயிறு வலிக்குது…

  • sankar - சென்னை,இந்தியா

    இப்படிப்பட்ட இன்டெலிஜென்ட்(?) ஆட்கள் எப்படித்தான் முதல்வர் ஆனார்களோ. அம்மவுக்கே வெளிச்சம். முகத்தில் களை வழியுது.

  • Visu Iyer - chennai,இந்தியா

    சட்டப்படி கழக பொது செயலாளர் சசிகலா தானே.. அவர் இல்லாத சட்டம் எப்படி செல்லும்.... இந்த கோமாளிகளை அரசியலில் இருந்து வெளியேற்றுங்கள்

  • Visu Iyer - chennai,இந்தியா

    சட்டப்படி வரி கட்ட வேண்டியவர் வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து விட்டு சட்டப்படி என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது

  • Suri - Chennai,இந்தியா

    மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அத நல்ல தெளிவா சொல்லுதா என்று பார்போம்.சந்தி சிரிக்கப்போவது மட்டும் தவிர்க்கமுடியாது போல. உறுப்பினர் எண்ணிக்கை தெளிவாக தெரியுமா? போட்டியிட மனு வாங்க வந்த தொண்டர்கள் நிலை இப்போது என்ன? சிலுவம்பாளயம் சில்லறை ஆசைக்கு துணை போன பாவம் இந்த மிச்சருக்கு வந்து சேர்ந்துவிட்டது. கொலை வழக்கில் சிக்குமா அந்த சில்லறை?

    • Visu Iyer - chennai,இந்தியா

      குற்றவாளி இறந்த பிறகு தானே தீர்ப்பு சொன்னார்கள்

Advertisement