dinamalar telegram
Advertisement

கோட்டையில் மீண்டும் சட்டசபை நேரடி ஒளிபரப்பு குறித்து ஆலோசனை

Share
Tamil News
சென்னை : சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள, சட்டசபையை நவீனமயமாக்கும் பணி நடந்து வருகிறது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவல் துவங்கிய பின், சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தல் முடிந்து, எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல், பதவியேற்பு ஆகியவையும், கலைவாணர் அரங்கில் நடந்தன. கவர்னர் உரை, முதல் பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட், மானிய கோரிக்கை என, முதல் சட்டசபை கூட்டத்தொடர், அங்கேயே நடந்து முடிந்தது.


தற்போது, தொற்று பரவல் குறைந்து வருவதால், அடுத்த சட்டசபை கூட்டத் தொடரை, புனித ஜார்ஜ் கோட்டையில், பாரம்பரியமிக்க பழமையான சட்டசபை கூட்ட அரங்கில் நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.அதற்காக, சட்டசபை கூட்ட அரங்கை நவீனப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி, முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் மேஜை மீது, கணினி பொருத்தப்பட்டு இருந்தது.
அதேபோல, சட்டசபை கூட்ட அரங்கில் கணினிகள் பொருத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையை புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என வலியுறுத்தியது. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளி
பரப்புவோம்' என்றும் வாக்குறுதி அளித்தனர்.அதை நிறைவேற்றுவது தொடர்பாகவும், ஆலோசனை நடந்து வருகிறது. நேற்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள், அதற்கான செலவு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • கௌடில்யன் - Chennai ,இந்தியா

    நடு நடுவில் நிஜாம் பாக்கு.. சரவணா செல்வரத்தினம்.. திரைக்கு வந்து சில நாட்களே ஆன .. மாதிரி விளம்பரங்களையும் வெளியிட்டால் சீரியல் பாத்த சுவாரஸ்யம் இருக்கும் ..

  • binakam - chennai,இந்தியா

    வெற்று பந்தாக்கு குறைச்சலில்லை. ஜனநாயக நெறிமுறை கடைப்பிடிப்பதில் காந்தி தோற்றார். ரெண்டுஜி ஊழல் ஊடகத்தில் வெளியிஇட்டால் நீதிபதி வேலை மிச்சமாகும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திமுகவின் கோமாளித்தனங்களை கண்டு ரசிக்க திராவிடர்களுக்கு நல்லதொறு வாய்ப்பு...

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ம், தலையெழுத்து இனி நிமிடத்துக்கு ஒரு முறை, "தளபதி வாழ்க, சின்ன தளபதி வாழ்க, குட்டி தளபதி வாழ்க" என்ற நாராச கோஷத்தை கேட்டே ஆக வேண்டும்.

Advertisement