dinamalar telegram
Advertisement

பருத்தி விலைக்கு இணையாக நுால் விலையை குறைக்கனும்! நூற்பாலை சங்கங்களுக்கு ஏ.இ.பி.சி., தலைவர் கடிதம்

Share
Tamil News
திருப்பூர்:''நீண்டநாள் தொழில் உறவுமுறையை கருத்தில்கொண்டு, பருத்தி விலைக்கு இணையாக, நுால் விலையை குறைக்க வேண்டும்,'' என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நுால் விலையை குறைக்க வேண்டுமென, தமிழ்நாடு நுாற்பாலைகள் சங்கம் மற்றும் தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கத்துக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,), தலைவர் சக்திவேல் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:நுால்விலை, இதுவரை இல்லாத அளவுக்கு, கிலோவுக்கு, 50 ரூபாய் விலை உயர்ந்தது அசாதாரணமானது. நுால்விலை நிலையாக இல்லாததால், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், ஒப்பந்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர்.

புதிய ஆர்டர்களை ஒப்பந்தம் செய்வதிலும் இழுபறி நீடிக்கிறது. இது, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை குறைப்பதாக உள்ளது. ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்த போது, பருத்தி மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் இடையே ஒற்றுமை இருக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார்.இருதரப்பினரும், வெளிப்படையான மற்றும் நியாயமான வர்த்தகத்தையும், ஒப்பந்தத்தையும் பின்பற்ற வேண்டும் என, அமைச்சர் வலியுறுத்தினார். ஆலோசனைக்கு பின்னர், நுால் விலையில், கிலோவுக்கு 10 ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

மிகவும் அதிகம்

பருத்தி நுால் விலை, ஒரு கேண்டிக்கு (356 கிலோ), 4,500 ரூபாய் விலை குறைந்துள்ளது; அதற்கு இணையாக நுால் விலை குறைக்கப்படவில்லை. பருத்தி விலையுடன் ஒப்பிடும் போது, நுால்விலை உயர்வு மிக அதிகம் என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.எனவே, பருத்தி விலை குறைப்புக்கு ஏற்ப, நுால் விலையை குறைக்க வேண்டும். நீண்டநாள் தொழில் உறவுமுறையை கருத்தில்கொண்டு, 'வின் - வின்' சூழ்நிலை கருதியும், பருத்தி விலைக்கு நிகராக, நுால் விலையை குறைக்க வேண்டும்.பருத்தி விலை அடிப்படையில், 40 ம்நம்பர் நுால் விலை கிலோவுக்கு, 320 ஆக இருக்க வேண்டும்; 371 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; கிலோவுக்கு, 50 ரூபாய் அதிகமாக இருக்கிறது.

மத்திய அமைச்சரின் ஆலோசனைப்படி, நியாயமான வர்த்தகம் மற்றும் வெளிப்படை தன்மையை நாங்கள் விரும்புகிறோம்.வெளிப்படை தன்மை இருந்தால் மட்டுமே, ஜவுளி மதிப்பு சங்கிலி பாதுகாக்கப்படும். எனவே, நவ., மாத அசாதாரண நுால் விலை உயர்வை திரும்பபெற வேண்டும். ஒட்டு மொத்த ஏற்றுமதித்துறையும், வரும் சீசனுக்கான ஆர்டர்களை முன்பதிவு செய்து, ஏற்றுமதி வர்த்தகத்தை தடையின்றி தொடர முடியும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

பருத்தி நுால் விலை, ஒரு கேண்டிக்கு (356 கிலோ), 4,500 ரூபாய் விலை குறைந்துள்ளது; அதற்கு இணையாக நுால் விலை குறைக்கப்படவில்லை. பருத்தி விலையுடன் ஒப்பிடும் போது, நுால்விலை உயர்வு மிக அதிகம் என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement