dinamalar telegram
Advertisement

ஈராக்கில் பைக் குண்டு வெடித்து 4 பேர் பலி

Share
பாஸ்ரா:ஈராக்கில் பைக் குண்டு வெடித்த சம்பவத்தில் அருகில் இருந்த கார்கள் தீப்பற்றின. இதில் நான்கு பேர் பலியாயினர்.மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது பாஸ்ரா நகரம்.

இங்கு நேற்று முன்தினம் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றிருந்த இரு கார்கள் தீப்பற்றின. அவற்றில் இருந்த நால்வர் பலியானதுடன், படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

பைக்கில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்ததா அல்லது தற்கொலைப்படை தாக்குதலா என கண்டுபிடிக்க முடியவில்லை.சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன் முடிவுகள் அடிப்படையில் உண்மை தெரியவரும் எனவும் பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement