dinamalar telegram
Advertisement

கருணை கொலைக்கு இயந்திரம் சுவிட்சர்லாந்தில் அனுமதி

Share
Tamil News
ஜெனீவா:லியில்லாமல் கருணை கொலை செய்வதற்கான புதிய இயந்திரத்துக்கு, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒரு நிமிடத்துக்குள் மரணம் ஏற்படும்.

'டாக்டர் டெத்'



சுவிட்சர்லாந்தில் கருணை கொலை செய்வதற்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டு உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 'டாக்டர் டெத்' என அழைக்கப் படும் டாக்டர் பிலிப் நிட்ஸ்சிகே புதிய இயந்திரத்தை வடிவ அமைத்துள்ளார்.சவப் பெட்டி வடிவிலான இந்த இயந்திரத்தில் ஒரு நிமிடத்துக்குள் வலியில்லா மரணம் ஏற்படுத்த முடியும். இயந்திரத்தினுள்ளே காற்று முழுமையாக நீக்கப்படுவதன் வாயிலாக மரணம் ஏற்படுத்தப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

எதிர்ப்பு



உடலை அசைக்க முடியாத, பேச முடியாத, கண்கள் மட்டும் செயல்படும் நோயாளி கூட, தன் கண் சிமிட்டல் வாயிலாக இந்த இயந்திரத்தை உள்ளுக்குள் இருந்து இயக்க முடியும். இந்த இயந்திரத்துக்கு சுவிட்சர்லாந்து அரசு அங்கீகாரம் அளித்துஉள்ளது. இருப்பினும் தற்கொலையைத் துாண்டுவதாக இந்த இயந்திரம் உள்ளதாக பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement