dinamalar telegram
Advertisement

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் கொலை

Share
நியூயார்க்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர், வங்கியில் பணம் செலுத்த வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கொலம்பஸ் நகரின் கிழக்கு பகுதியில் காஸ் நிறுவனம் நடத்தியவர் அமித்குமார் படேல், 45. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் தன் நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் அப்பகுதியில் உள்ள வங்கியில் செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் காலை வங்கிக்கு பணம் செலுத்த வந்த அவரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொன்றார். பின் அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பினார்.வங்கியின் அருகிலேயே போலீஸ் நிலையம் அமைந்துள்ளதால், உடனடியாக அங்கு வந்த போலீசார் அமித்குமாரின் உடலை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

அமித் குமார் வங்கியில் பணம் செலுத்துவதை அறிந்து, காஸ் நிறுவனத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.கடந்த மாதம் 17ம் தேதி டெக்சாஸ் மாகாணம் மெஸ்குயிட் நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கடை உரிமையாளர் சாஜன் மேத்யூ, 55, சுட்டுக் கொல்லப்பட்டார்இது தொடர்பாக 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement