dinamalar telegram
Advertisement

ரூ.2,000 நோட்டு புழக்கம் குறைந்தது ஏன்?

Share
Tamil News
புதுடில்லி,: 'கடந்த 2018ல் 336.3 கோடி எண்ணிக்கையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டு, தற்போது, 223.3 கோடியாக குறைந்துள்ளது' என, ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை தடுக்கும் வகையில், 2016 நவம்பர் 8ல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அதற்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது நாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்த கேள்விக்கு, ராஜ்யசபாவில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளதாவது:கடந்த 2018ல், 2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை, 336.3 கோடியாகஇருந்தது.

இது ஒட்டு மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகவும், மதிப்பில் 37.26 சதவீதமாகவும் இருந்தது.அதுவே, தற்போது 223.3 கோடியாக உள்ளது. அதாவது தற்போதுள்ள ஒட்டுமொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் 1.75 சதவீதமாகவும், மதிப்பில் 15.11 சதவீதமாகவும் உள்ளது.

இந்த, 2,000 ரூபாய் நோட்டுகள், 2018 - 2019க்கு பின் புதிதாக அச்சடிக்கப்படவில்லை.அதற்கான தேவையும் ஏற்படவில்லை. கிழிந்தது போன்ற காரணங்களால், 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (17 + 16)

  • m.viswanathan - chennai,இந்தியா

    கிழிந்தது போன்ற காரணங்களால், 2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்பட்டு உள்ளது. : : காங்கிரஸ் காலத்தில் அச்சடித்த , நுறு , ஐம்பது , இருபது நோட்டுகள் இன்னும் கிழியவில்லை . நம்புறது மாதிரியா இருக்குது .

  • M Selvaraaj Prabu - Gaborone,போஸ்ட்வானா

    2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  • bal - chennai,இந்தியா

    எல்லா இரண்டாயிரம் ரூபா நோட்டுகளையம் அமுக்கிட்டானுக..கருப்பு பணமா.

  • Sathish Qatar - Doha,கத்தார்

    இது மத்திய அரசின் மிக நல்ல திட்டம். அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இரண்டாயிரம் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வரும். நல்ல பணம் வெளியில் வரும். பதுக்கி வைப்பவர்கள் கதி அதோகதி தான்.

  • selvaraju - KUALA LUMPUR,மலேஷியா

    ஜோக்கு சேகர்... எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இப்போ எல்லா நோட்டும் ஒரு சில இடங்களில் பதுக்கப்பட்டிருப்பதால் அதில் இருக்கும் சிப்பு மூலம் அது இருக்கும் இடத்தை கண்டுபிடுத்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

Advertisement