dinamalar telegram
Advertisement

கோவா மாஜி முதல்வர் விலகினார்: காங்.,குக்கு பின்னடைவு

Share
பனாஜி :கோவாவின் முன்னாள் முதல்வரான ரவி நாயக் காங்.,கில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது கோவா மாநிலத்தில், காங்.,குக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.கோவாவில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
கடந்த 2017 தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்., 17ல் வென்றது. ஆனால் 13 தொகுதி களில் வென்ற பா.ஜ., மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.அதைத் தொடர்ந்து காங்.,கில் இருந்து பல எம்.எல்.ஏ.,க்கள் விலகினர். அதில் பெரும்பாலானோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.

முன்னாள் முதல்வரான லுாய்ஜின்ஹோ பலோரோ சமீபத்தில் காங்.,கில் இருந்து விலகி திரிணமுல் காங்.,கில் இணைந்தார்.

இந்நிலையில், மற்றொரு முன்னாள் முதல்வரான ரவி நாயக்கும் கட்சியில் இருந்து இன்று (டிச. 07) விலகினார். தன் எம்.எல்.ஏ., பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.அவரது இரண்டு மகன்கள் சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தனர். அதனால் இவரும் பா.ஜ.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி நாயக் ராஜினாமாவைத் தொடர்ந்து, சட்டசபையில் காங்.,கின் பலம் மூன்றாகக் குறைந்து உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • பச்சையப்பன் கோபால். -

    ஆக ஆக ஆஹா! இந்த குப்பை வெளியே வீசப்பட்டது நல்லதுதான். எங்கள் இளவரசர் RAW KUL ஜீ பிரதமர் ஆவதற்கு உள்ள தடை நீங்கியது. அதுமட்டுமின்றி எங்கள் தங்க தள்ளபதி து.பி ஆக உள்ள தடையும் நீங்கி விட்டது.

    • pradeesh parthasarathy - Mylapore

      இந்த குப்பை பிஜேபி என்னும் குப்பையில் சேர்ந்து விரைவில் மக்கி போக போகிறது ....

  • பேசும் தமிழன் -

    கான் கிராஸ் இல்லாத இந்தியா... அது தான் நம் நாட்டுக்கு நல்லது... அப்போது தான் மதவாதிகள் கொட்டம் அடங்கும்... பிரிவினை வாதம் பேசும் கும்பலுக்கு ஆதரவு தருவது அவர்கள் தான்... கான் கிராஸ் நாட்டில் இல்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் சீனா வாலை சுருட்டி கொண்டு இருப்பர்கள்

  • சீனி - Bangalore,இந்தியா

    கோவாவுல கால் பதிக்கும் அனைவரும் தள்ளாட்டத்தில் தான் உள்ளனர், கீழே விழாமல் நடந்தால் சரி.... ஹாஹாஹா....

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    . இவ்வளவு நாட்கள் தூங்கினீர்களா

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    காங்கிரஸ் தலைமையை பொறுத்தவரை கட்சியில் ராவுளுக்கு எதிரான மனநிலை கொண்ட அனைத்து மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறும் வரை அமைதி காக்கிறது.. இவர்கள் எல்லாம் கட்சியை விட்டு சென்றால் ராவுலுக்கு தலைமை பதவியை ஏற்கவும் கட்சியை அவரின் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வர இது ஏதுவாக இருக்கும் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் கீழ் மட்ட அமைப்புக்களில் கூட மிகப்பெரிய பாதிப்பு கட்சிக்கு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை அவர்கள் ஏற்க மறுக்கிறார்களோ என்கிற சந்தேகமும் உள்ளது ....அதே போல நல்வாய்ப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் பல தலைவர்கள் திரிணாமுல் கட்சியில் இணைவது பா ஜ விற்கு பலமே....

Advertisement