Load Image
dinamalar telegram
Advertisement

முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்? இன்று முக்கிய அறிவிப்பு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி:விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர மத்திய அரசு உறுதி அளித்துள்ளதை அடுத்து, விவசாயிகள் போராட்டம் இன்று ( டிச.08) வாபஸ் பெறப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச விவசாயிகள் டில்லி எல்லையில், கடந்த ஓராண்டாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த பார்லி., குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளன்று, மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது.

Latest Tamil News

குறைந்தபட்ச ஆதரவு விலை, மின்சார திருத்த மசோதா உள்ளிட்ட ஆறு புதிய கோரிக்கை களை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்க விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாக, விவசாய சங்க தலைவர் குல்வந்த் சிங் சந்து நேற்று தெரிவித்தார்.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (30)

  • raja - Cotonou,பெனின்

    தரகனுவோ இப்போ சந்தோசமா இருக்கானுவொலே.. இந்த கேடுகெட்ட விடியல் ஆட்சியில கத்திரிக்கா முருங்கக்கா தக்காளி இன்னு எல்லா காய்கறிகளையும் கொள்ளை விலைக்கு கிலோ ரூவா 400 கு விக்கிறானுவோலே......அப்புறம் என்ன கூடாரத்தை கலைச்சிடுவானுவோ....

  • ஜெயந்தன் - Chennai,இந்தியா

    உ.பி தேர்தலுக்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் தான்... பிஜேபியின் தலை தப்பிக்கும்..தேர்தலில்...

  • vbs manian - hyderabad,இந்தியா

    வாபஸ் பெறாவிட்டால் மக்கள் அடித்து துரத்தி விடுவார்கள். அவ்வளவு கோபம் வெறுப்பு மக்கள் மனதில் உள்ளது.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    அரசியல்கட்சிகளுக்கு பதவி இல்லையென்றால் மக்களை எப்படியெல்லாம் தவறான வழிகளில் தூண்டிவிட்டு, இறப்புக்கு ஆளாக்கி, அதிலும் இலவச விளம்பரம் தேடுவதை விட்டுவிட்டு நாட்டு நலனில் அக்கறை காட்டினால் ஜனநாயகம் மலரும், வந்தே மாதரம்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    எனக்கு ஆடிகார் அய்யாக்கண்ணுவும் பச்சைத்துண்டு PR பாண்டியனும் விவசாயம் செய்வதை பார்க்க ஆசை.

Advertisement