லாரி மோதி வாலிபர் பலி
ஓசூர்: பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், 23. சூளகிரி அடுத்த சின்னாரிலுள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில், பொக்லைன் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையிலுள்ள சின்னாறு அருகே ஹோண்டா சைன் பைக்கில் சென்றார். அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!