dinamalar telegram
Advertisement

முதல்வரை இமயமலை அளவுக்கு யார் புகழ்கின்றனரோ அவர்களுக்குத் தான் பதவி

Share
தி.மு.க., - எம்.பி., ஆ.ராசா பேச்சு: சிறந்த நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக முதல்வர் ஸ்டாலினை, ஒரு தத்துவத் தலைவராக நான் பார்க்கிறேன். வரும் லோக்சபா தேர்தலில் அவரை நாட்டின் தலைசிறந்த தலைவராக உருவாக்குவோம்.

முதல்வரை, இமயமலை அளவுக்கு யார் புகழ்கின்றனரோ அவர்களுக்குத் தான் பதவி என ஏதேனும் நிபந்தனை உள்ளதா; எல்லாரும் இஷ்டத்திற்கு புகழ்ந்து தள்ளுறீங்களே...
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு
: பிற சமுதாயத்தினருடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும், அவர்களின் விரோதத்தை சம்பாதிக்காமல் இருக்கவும், எஸ்.சி., - எஸ்.டி., சட்டப்படி பிற சமுதாயத்தினர் மீது வழக்கு தொடராமல் இருப்போம்.

இதுபோன்ற சமூக நல முடிவுகளை, தலித் மக்களுக்கான கட்சி என கூறுபவை செய்வதில்லையே; அவர்களின் குறிக்கோள் தான் என்ன?விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: கொரோனாவால் இறந்தவர்களுக்கு தலா, ௪ லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். 'ஒமைக்ரான்' வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பார்லிமென்டில் பேசினேன்.

எம்.பி.,யாக இருப்பதால், பார்லிமென்டில் பேசி இருப்பீர்கள்... நம் மாநிலத்தில் அனைத்து சமூக நல்லிணக்கத்திற்கு என்ன செய்ய உத்தேசம்?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை: ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டம் வாபஸ் இல்லை. அதே நேரத்தில், மத்திய அரசுடன் பேச்சு நடத்த, ஐவர் குழுவை அமைத்துள்ளனர். சபாஷ்.

கம்யூ.,க்கள் நடத்தும் போராட்டத்திற்கு, கம்யூ.,க்களே சபாஷ் போடுவதை தவிர வேறு வழியில்லை!தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சென்னை போல கோவையை மாற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் சொன்னதுபடியே, கோவையிலும் மழை சேதம் ஏற்பட்டு, சுரங்கப் பாதையில் வாகனங்கள் கூட மூழ்கி விட்டன.

நல்லவேளை முதல்வர், மதுரை, நெல்லை பக்கம் சென்று அவ்வாறு கூறாமல் விட்டாரே!சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை: சுவர்களில் கட்சித் தலைவர்கள், மக்களை பார்த்து சிரித்துக் கொண்டேயிருக்கின்றனரே அது ஏன் தெரியுமா... உங்களை தன்மானம் இழந்தவர்களாக, குடிகாரர்களாக, வேலைத்தேடி அலைபவர்களாக, பணத்துக்கு ஓட்டளிப்பவர்களாக தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோமே என்பதற்கான சிரிப்பாக இருக்குமோ அது?

உண்மை தான். நாட்டின் நிலைமையும், வாக்காளர்களில் சிலரின் நிலைமையும் அப்படித் தான் இருக்கிறது!Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (24)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Ithaivida car tyrenakkinaal periya pathavi kidaikum

 • சீனி - Bangalore,இந்தியா

  மேலே உள்ளவர்களை புகழ்ந்து, மேலும் மக்கள் தொடர்ந்து 500க்கும் குவாட்டருக்கும் போராடும் நிலையில் வைத்திருப்பார்கள். இதுங்களும் திருந்தாது, அதுங்களும் திருந்தாது என்று படித்தவர்கள் ஒதுக்கித்தள்ளி போய்கொண்டே இருக்கவேண்டும், இல்லன்னா டீசண்டாக கட்சிக்கு படித்தவர்கள் தொடர்ந்து ஓட்டு போட்டால் ஒரு நாள், மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

  ஹி ஹி ஹி எனக்கு ஹிந்தி தெரியாது போடா ஹி ஹி ஹி

 • selva - Chennai,இந்தியா

  அந்த வீனா ...போனவனை புகளுங்கொ

 • sridhar - Chennai,இந்தியா

  உண்மையில் அது சின்னமலை கூட இல்லை .

Advertisement