dinamalar telegram
Advertisement

ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து தயாரிக்க கோவையில் 30 ஏக்கர் நிலம் தேர்வு; பாஸ்டியர் நிறுவன இயக்குனர் தகவல்

Share
ஊட்டி: ''ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து தயாரிக்க கோவையில் 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக,'' பாஸ்டியர் நிறுவன இயக்குனர் சிவக்குமார் கூறினார்.

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 1907ல் நிறுவப்பட்ட பாஸ்டியர் நிறுவனத்தில், வெறிநாய் கடிமருந்து தயாரிக்கப்பட்டது. 2007ல் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, 'ரேபிஸ்' நோய் கண்டறியும் மையமாக செயல்படுகிறது. சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து, 'தொண்டை அடைப்பான்; ரண ஜன்னி; கக்குவான் இருமல்' என்ற நோய்களை குணப்படுத்தும், முத்தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமாக மத்திய அரசு மாற்றியது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
குன்னுார் பாஸ்டியர் நிறுவன இயக்குனர் சிவக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களை, பாட்டிலில் நிரப்புவதற்கான பணியில் பாஸ்டியர் நிறுவனம் ஈடுபடவில்லை. தனியார் நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகிறது.தட்டுப்பாடு, ஏற்படும் சமயத்தில் பாஸ்டியர் நிறுவனத்தின் பங்களிப்பை பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தில், தொண்டை அடைப்பான்; ரண ஜன்னி; கக்குவான் இருமலுக்கான, முத்தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சோதனை பணிகள் நடந்து வருகிறது.

வரும், 2023ல் ஒரு கோடி டோஸ், முத்தடுப்பூசி மருந்து வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 'ரேபிஸ்நோய்' தடுப்பு மருந்து தயாரிக்க, கோவை அருகே உள்ள பிரஸ்காலனி பகுதியில் 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு, சிவக்குமார் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • ஆரூர் ரங் -

    இந்தியாவில் திரியும் அளவுக்கு உலகில் 🤔வேறெங்கும் தெரு நாய்கள் இல்லை . அவை இருக்கும் வரை ரேபிஸ் ஒழிப்புக்கு எவ்வளவு கோடி செலவழித்தும் 😪 பயனிருக்காது. இது பெருமைக்கு எருமை மேய்க்கும் வேலை.

    • Anand - chennai

      அவைகள் அப்படி திரிந்தாலும் நமது பொருளாதாரத்திற்கு பெருசா எந்த பாதிப்பு ஏற்படுவதில்லை, அதுகளை விட போராட்டம் என கூறி திரியும் ...தான் அதிகம், இவை இருக்கும் வரை எவ்வளவும் கோடி செலவழித்தாலும் இந்தியாவை முன்னேற விடமாட்டார்கள்...

  • RandharGuy - Kolkatta,இந்தியா

    செங்கல்பட்டு ல இருக்கற வாக்ஸின் பேக்டரி துறக்க துப்புக்கேட்ட அரசு ....எய்ம்ஸ் செங்கல் அரசு இத எப்டி

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    குருமா, சைக்கோ, கனி, அங்க இருக்குற அல்லோலியா பாதர் எல்லோரையும் பார்த்து கவனிச்சிடுங்க, இல்ல அப்பால தூத்துக்குடி formula தான், பார்த்தப்பு

    • Anand - chennai,இந்தியா

      அனைவரும் கோயம்பத்தூரில் அடக்கித்தான் வாசிக்கவேண்டும், தூத்துக்குடி போல ஆர்ப்பாட்டம் செய்தால் மிதி தான் விழும்.......

Advertisement