dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ.531 கோடியில் வீடுகள்: அரசு திட்டம்

Share
சென்னை : நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களை அப்புறப்படுத்தி, மறு குடியமர்வு செய்ய, 6,000 வீடுகள் கட்டும் திட்டத்தை, தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்த உள்ளது.


தமிழகத்தில் ஏரி, குளங்கள், ஓடைகள் ஆகியவற்றில், ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடும் நெருக்கடிநீர் வழித்தடங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப் பட்டதால், மழை காலத்தில் முறையான குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப் படுகின்றன. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் நிலையில், அங்கு வசிப்போர் மாற்று இடத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக ஒரு பெருந்திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியது.இத்திட்டத்துக்கு 1,050 கோடி ரூபாயை கடனாக வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. மத்திய - மாநில அரசுகள் இணைந்து, 450 கோடி ரூபாயை இத்திட்டத்துக்கு வழங்க முடிவு செய்து உள்ளன.

மறுகுடியமர்வு கட்டாயம்



இதையடுத்து, 1,500 கோடி ரூபாயில், திருநெல்வேலி, மதுரை, தஞ்சை, சிவகங்கை, தேனி, தென்காசி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய ஒன்பது மாவட்டங்களில், 6,000 வீடுகள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்க, அவற்றில் வசிப்போருக்கு மறுகுடியமர்வு கட்டாயம். எனவே, இந்த புதிய திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் செயல்படுத்தப் படுகிறது. முதற்கட்டமாக, 419 கோடி ரூபாயில், திருநெல்வேலி, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில், 2,745 வீடுகள் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி உள்ளன.


இதையடுத்து, 531 கோடி ரூபாயில், ஆறு மாவட்டங்களில் 3,255 வீடுகள் கட்டும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இத்திட்டம் நிறைவடையும் போது, நீர்நிலைகளில் இருந்து, 6,000 குடும்பங்கள் வெளியேற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • raja - Cotonou,பெனின்

    1050+450 கோடி ரூபாயை கடனாக வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. 1500 கோடி ரூபாயையும் புறங்கையால் நக்கிடுவானுவோ இந்த திருட்டு தில்லு முள்ளு உடன்பிறப்புகள்

  • duruvasar - indraprastham,இந்தியா

    அப்ப வள்ளுவர் கோட்டத்தை மறுபடியும் கட்டபோறாங்களா ?

  • Vivekanandan Mahalingam - chennai,இந்தியா

    அடுத்த கொள்ளைக்கு திட்டம் தயார். முதலில் ஆக்கிரமிப்புகளை இடியுங்கள். இவர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்களோ அங்கே திரும்பி செல்லட்டும் - வோட்டிற்காக கருணாநிதி செய்ததன் விளைவு தான் இது

  • kanagasundaram - Chennai,இந்தியா

    ஒரு முறை திட்டமாக செயல்படுத்த வேண்டும் . ஆக்கிரமைப்பாளர்களின் பொருளாதார அடிப்படையில் வீடு வழங்க வேண்டும். இத்திட்டம் தொடக்கூடாது. தொடர்ந்தால் ஆக்கிரமிப்புகள் தொடரும்.

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    இதுதாண் திராவிட அரசியல். ஆக்கிரமிப்பை அனுமதிக்க வேண்டியது. அப்புறம் அதுங்களக்கு இளிச்சவாயன் கட்டுற வரி பணத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டியது. கொஞ்ச நாளில் வேற யாராவது ஆக்கிரமிப்பு செய்வாய்ங்க. இது ஒரு தொடர்கதை. இளிச்சவாயன் இளிச்சுகிட்டே இருப்பாய்ங்க 👹👹👹

    • Shekar - Mumbai,இந்தியா

      உண்மைதான், நகையை அடமானம் வச்சி, ஹௌசிங் லோன், இன்சூரன்ஸ் லோன், பிஎப் லோன், பர்சனல் லோன், இப்படி ஊரில் உள்ள எல்லா லோனையும் போட்டு வீடு கட்டுபவன் பைத்தியக்காரன்.

Advertisement