dinamalar telegram
Advertisement

பசுமை, எழில் சூழ்ந்த ஆண்டிபாளையம் குளம் சுற்றுலா தலமாகிறது! இயக்குனர் தலைமையிலான குழுவினர் ஆய்வு

Share
Tamil News
திருப்பூர்:ஆண்டிபாளையம் குளத்தை, படகு சவாரியுடன் கூடிய பொழுதுபோக்கு தலமாக மாற்ற, சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மாநகராட்சியின், 60வது வார்டில், ஆண்டிபாளையம் குளம் அமைந்துள்ளது. மொத்தம், 90 ஏக்கர் பரப்பளவு இக்குளத்தில், 86 ஏக்கர் அளவுக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், 'வெற்றி' அமைப்பினர், பொதுமக்கள் கரசேவையுடன், குளம் பொலிவுபடுத்தப்பட்டது.குளக்கரைகளில், கருங்கல் பதிக்கப்பட்டு, குளத்துக்குள், இரண்டு தீவு போன்ற திட்டுகள் உருவாக்கி, மரக்கன்றுகள் நடப்பட்டன.

தற்போது, குளத்துக்குள், இரண்டு பசுமை தீவு போல் மாறியுள்ளது. குளத்தின் தென்மேற்கு பகுதியில், மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பூங்கா பூட்டப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கும், ஆண்டி பாளையம் குளத்தை, படகு சவாரியுடன் கூடிய, சுற்றுலாத்தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் நிதியுடன், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மாற்ற கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் குளத்தை ஆய்வு செய்தனர்.சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்துரி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குளங்களில், சுற்றுலா வசதிகளை ஏற்படுத்த ஆர்வம் செலுத்தி வருகிறார். அதன்படி, விரைவில் ஆண்டிபாளையம் குளத்தில், படகுசவாரி துவக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டிபாளையம் குளம், பொதுமக்கள் கரசேவையால் பொலிவுப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக தண்ணீர் தேக்கப்படுகிறது. குளக்கரையில் உள்ள சிறுவர் பூங்காவை புதுப்பித்து, குளத்தில் படகுசவாரி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, குளத்திற்கு படித்துறை கட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா நிதியில், இத்தகைய மேம்பாட்டு பணிகளை செய்ய கருத்துரு அனுப்பி வைத்திருந்தோம். அதன்படி, இயக்குனர் தலைமையிலான குழுவினர் குளத்தில் ஆய்வு செய்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சுற்றுலாத்துறையின் நிதியுடன், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலமாக மாற்ற கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர், குளத்தை ஆய்வு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement