ஆங் சான் சூச்சிக்கு நான்காண்டு சிறை; குவியும் கண்டனங்கள்
நேப்பிடா: மியான்மர் நாட்டின் மூத்த ஜனநாயகத் தலைவரான ஆங் சான் சூச்சிக்கு(76) நான்காண்டு சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ம் தேதிமுதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அங்குள்ள ஜூன்டா எனப்படும் ராணுவ தலைமை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவு குடிமக்களை சூட்டு கொன்றது.
முக்கிய தலைவர்களான ஆங் சான் சூச்சி உள்ளிட்ட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மியான்மர் நாட்டின் மூத்த ஜனநாயக தலைவரான ஆங் சான் சூச்சிமீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டன.
இதனை அந்நாட்டு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வந்தது. கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது, கையூட்டு பெற்றது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக இன்று அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மியான்மர் நாட்டு அதிபர் வின் மின்ட்டுக்கு நான்காண்டு சிறை விதிக்கப்பட்டது. தலைநகர் நேப்பிடாவில் பத்திரிகையாளர்கள் இதுகுறித்த செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னாள் அரசியல் தலைவர் ஒருவருக்கு 75 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. அம்னேஸ்டி இன்டர்நேஷனல் துணை இயக்குனர் மின் யூ கா, ஆங் சன் சூச்சி-யின் சிறை தண்டனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவர்மீது அந்நாட்டு ராணுவம் பல பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி தண்டனை பெற்று தந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அமைதியாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் போராட்டக்காரர்கள் மூவர் மீது ராணுவத்தினர் கார் ஏற்றியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். உலக நாடுகள் பல தங்கள் கண்டனங்களை பதிவு செய்த போதிலும் மியான்மர் ராணுவம் தனது சர்வாதிகாரம் மற்றும் வன்முறை தாக்குதலை நிறுத்தாமல் தொடர்வது சோகமான விஷயம்.

வாசகர் கருத்து (3)
0..............
ஆங் சான் சூச்சி அம்மையாரே உங்களுக்கு மறுபடியும் சிறைத்தண்டனை என்பதை வாசிக்கும்போது மனம் நெகிழ்ந்தது... கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதிற்கா இவ்வளவு பெரிய தண்டனை? இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்கு ஆதரவாக முன்னோடிகளான மார்ட்டின் லூதர் கிங்/காந்தி இவர்களின் அடிச்சுவடுகளில் பல ஆண்டுகள் பயணித்து பர்மா நாட்டு மக்களுக்காக பாடுபட்டுவிட்டீர்கள். இராணுவம் தன் தண்டனையை விலக்கிக்கொள்ளும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்....
மியான்மார் ராணுவம் தங்களை யாரும் எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்கிற தைரியம் தான் காரணம் ...