ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்தியா - ரஷ்யா இடையிலான மாநாடு ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியா வந்தார்.
இன்று (டிச.06) டில்லி ஐ தராபாத் ஹவுஸ் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை, விளாடிமிர் புடின் சந்தித்துப் பேசினார். இதைதொடர்ந்து நடக்க உள்ள மாநாட்டில் ராணுவம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசப்படும். விண்வெளி, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் இருதரப்பு பேச்சுவார்த்தை நிகழ்ந்தது. கோவிட் தொற்று சவால்களுக்கு பின்னரும் இரு தரப்பு உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இரு நாட்டு உறவு வளர்ச்சி வேகத்தில் எந்தமாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சீராக உள்ளது.இந்தியா-ரஷ்யா இடையிலான நட்பு நிலையானது, நம்பகமானது, தனித்துவமானது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மாபெரும் சக்திமிக்க நாடு இந்தியா
பின்னர் ரஷ்ய அதிபர் புடின் பேசியபோது, இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகள் எந்த காலத்திலும் வலுவாக இருக்கும், இரு நாடுகளின் ஒத்துழைப்புடன் உயர் தொழில்நுட்ப சாதனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். வேறு எந்த நாட்டுடனும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவுடன் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இரு நாடுகளின் வர்த்தக மதிப்பு 38 பில்லியன் டாலராக உள்ள நிலையில், ரஷ்ய தரப்பிலிருந்து மேலும் முதலீடுகள் செய்யப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முக்கியமாக ஸ்புட்னிக் கோடிக்கணக்கில் வாங்கப்படும்...ஹிஹிஹி