dinamalar telegram
Advertisement

நகரில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு! சிறப்பு குழு அமைக்கிறது மாநகராட்சி

Share
Tamil News
கோவை:தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று சிறிது நேரம் பெய்த மழைக்கே நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் நீரில் மூழ்கின. ஆண்டாண்டு காலமாக தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு குழு அமைக்க உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக, பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இத்திட்டத்தால் மழை நீர் தேங்குவதை தடுத்து, நகரை ஸ்மார்ட் ஆக மாற்ற, எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.குறிப்பாக, மழை பெய்தால் கோவை நகரம், நரகமாக மாறிவிடுகிறது. அந்தளவுக்கு மோசமான நிலையே ஏற்படுகிறது.நேற்று முன்தினம், கோவையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிக்கானி பள்ளி அருகே ரயில்வே சுரங்கப்பாதை என, பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மழை வெள்ளத்தில் மூன்று கார்கள், ஒரு பஸ் சிக்கின.

இதையடுத்து மாநகராட்சி சார்பில், மோட்டார் பம்ப்கள் மூலம், தண்ணீர் வெளியேற்றப்பட்டு நிலைமை சீர்செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 45 நிமிடங்களுக்கும் மேல், லேசான மழை பெய்தது. இந்த மழைக்கே அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. வழக்கம் போல் லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில், அதிக தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக டவுன்ஹால், உக்கடம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், பிரதான வழியான லங்கா கார்னர் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அனைத்து வாகனங்களும் அவிநாசி மேம்பாலம், வாலாங்குளம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், இப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஸ்தம்பித்தன. இன்ச், இன்ச் ஆகதான் வாகனங்களால் நகர முடிந்தது. பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ஒவ்வொரு மழைக்கும் இந்த நிலைமைதான்; நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என, மாநகராட்சி நிர்வாகத்தை திட்டித்தீர்த்தனர்.

இது குறித்து, கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ''மழை தண்ணீர் தேங்குவதை தடுக்க அல்லது தண்ணீர் தேக்கத்தை குறைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேங்கும் தண்ணீரை, வேறு வழிகளில் திருப்பி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து, நடவடிக்கை எடுக்க குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான கூட்டம் நாளை (இன்று) நடக்க உள்ளது. நிரந்தர தீர்வு காண என்னென்ன செய்யலாம் என்பது குறித்து, தனியார் நிறுவனங்கள், கல்லுாரி பேராசிரியர்களிடம் ஆலோசனை பெறப்பட உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • ராமகிருஷ்ணன் -

    குழு அமைத்தால் பிரச்சனை தீர்ந்தது என்ற மாயை விடியல் அரசு கொண்டு உள்ளது.

  • ராமகிருஷ்ணன் -

    . அந்த குழு என்ன வேலை செய்ததது, அவர்கள் வேலை முடிக்க கால நிர்ணயம், அதர்க்கு நிதி ஒதுக்கீடு எதுவும் வெளியில் வராது.

  • ராமகிருஷ்ணன் -

    , தெரியாது.

  • ராமகிருஷ்ணன் -

    Please don't repeat the same comment

  • ராமகிருஷ்ணன் -

    குழு அமைத்தால் பிரச்சனை தீர்ந்தது என்ற மாயை விடியல் அரசு கொண்டு உள்ளது. அந்த குழு என்ன வேலை செய்ததது, அவர்கள் வேலை முடிக்க கால நிர்ணயம், அதர்க்கு நிதி ஒதுக்கீடு எதுவும் வெளியில் வராது, தெரியாது.

Advertisement