dinamalar telegram
Advertisement

27 விதிமீறல் கட்டடங்கள் நிலை என்ன? அமைதி காக்கும் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்

Share
Tamil News
சென்னை : சென்னையில், அதிகபட்ச விதிமீறல்கள் இருப்பதாக, 2011ல் சி.எம்.டி.ஏ., பட்டியல் வெளியிட்ட 27 அடுக்குமாடி கட்டடங்கள், தற்போது பயன்பாட்டில் உள்ளன. இதில், சி.எம்.டி.ஏ., எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2007ல், சென்னையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில், அதிகபட்ச விதிமீறல் உள்ள அடுக்குமாடி வளாகங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் தி.நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 27 அடுக்குமாடி கட்டடங்கள் இடம்பெற்றன.நீதிமன்றத்தின் நெருக்கடியால் இந்த பட்டியலை, 2011ல் சி.எம்.டி.ஏ., வெளியிட்டது. மேலும், பொதுமக்கள் இந்த கட்டடங்களில் வீடு வாங்குவது, பயன்படுத்துவதை தவிர்க்குமாறு, சி.எம்.டி.ஏ., எச்சரிக்கை விடுத்தது.

இதில், சில கட்டடங்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். பின், நீதிமன்ற உத்தரவு எனக் கூறி 'சீல்'கள் அகற்றப்பட்டன.தற்போது இந்த கட்டடங்கள் அனைத்தும், அதே விதிமீறலுடன் பயன்பாட்டில் உள்ளன. இந்த விஷயத்தில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:நீதிமன்ற உத்தரவால், அதிக விதிமீறல் உள்ள கட்டடங்கள் விபரங்களை சி.எம்.டி.ஏ., வெளியிட்டது.


பட்டியலில் உள்ள கட்டடங்களில் காணப் பட்ட விதிமீறல்கள் சரி செய்யப்பட்டதா, கட்டடம் வரன்முறை செய்யப்பட்டதா என எதுவும் வெளிப்படையாக கூறப்படவில்லை.விதிமீறல் கட்டடங்களை பாதுகாப்பதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் எந்த அளவுக்கு கவனமாக உள்ளனர் என்பதற்கு இதுவே உதாரணம். விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement