பெண்ணின் வாகனப் பதிவு பலகையில் ‛செக்ஸ் என்ற வார்த்தை: பெண்கள் ஆணையம் நோட்டீஸ்

இதனால் அந்த பெண் மிகுந்த தர்மசங்கடத்திற்கு ஆளாகி உள்ளார். சாலையில் செல்லும்போது பலர் இதை கூறி அவரை கிண்டல் செய்வதாகவும், பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.இது தொடர்பாக, டில்லி பெண்கள் ஆணையத்தில் அந்த பெண் புகார் அளித்துஉள்ளார். இதன் அடிப்படையில் போக்குவரத்து துறைக்கு டில்லி மகளிர் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இருசக்கர வாகன பதிவு எண்ணை உடனடியாக மாற்றி தரும்படி அதில் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

உத்தரவு
மேலும் இதே போன்ற பதிவு எண் வரிசை கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பாக பதிவாகி உள்ள புகார்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான்கு நாட்களுக்குள் விளக்கமளிக்கும்படி டில்லி போக்குவரத்து துறைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (5)
ஸ் என்பது வண்டியை குறிப்பது அல்ல.. தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிர்க்கப்பதால், எழுத்துக்களின் வரிசையும் கூடிவருகிறது ..
இது உப்பு சப்பில்லாத விஷயம். பதிவு எண்கள் கம்ப்யூட்டரால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் அதிகாதிகள் தவறு எதுவும் இல்லை. பிடிக்கலேன்னா வேற பிளேட் வாங்கிக்கலாம். தகறாரு இல்லாம குடுத்திடலாம். கேவலமா சினிமால காமிக்கறாங்க.
இது உப்பு சப்பில்லாத விஷயம். பதிவு எண்கள் கம்ப்யூட்டரால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் அதிகாரிகள் தவறு எதுவும் இல்லை. பிடிக்கலேன்னா வேற பிளேட் வாங்கிக்கலாம். தகறாரு இல்லாம குடுத்திடலாம். கேவலமா சினிமால காமிக்கறாங்க.
அதிகாரிகளுக்கு புத்தி வேண்டாமா?
பெண்களும் வேலை செய்யும் பங்கு மார்க்கெட்டில் SENSEX அப்படின்னு இருக்கே, அதுக்கு NSEக்கு நோட்டீஸ் அனுப்பிடலாமா ??