dinamalar telegram
Advertisement

படபடப்பு போக்க சம்யுக்த ஹஸ்த முத்திரையை பயன்படுத்தும் ஏஞ்சலா மெர்கல்..!

Share
பெர்லின்: படபடப்பு போக்க இந்திய யோக முத்திரையான சம்யுக்த ஹஸ்த முத்திரையை ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் பயன்படுத்துவது வைரலாகி உள்ளது.


ஜெர்மானிய கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர் மற்றும் ஜெர்மனி நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மெர்கல். ஐரோப்பிய நாடுகளின் பெண் தலைவர்களில் மார்க்ரெட் தாட்சருக்குப் பின்னர் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படுபவர். 67 வயதான ஏஞ்சலா மெர்கல், விரைவில் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.இயற்பியல் துறையில் பட்டம் பெற்ற இவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமானார்.
ஆரம்பத்தில் மீடியா வெளிச்சம் இவரை சூழ்ந்துகொண்டது. ஊடகங்களை எதிர்கொள்ளத் தயங்கிய ஏஞ்சலா, புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க அதிக கூச்ச பட்டவர். புகைப்படங்களுக்குப் போஸ் கொடுக்கும்போது படபடப்பு போக்க ஏஞ்சலா மெர்கல் மார்புக்கு கீழ் இருக்கைகளின் விரல்கள் நுனிகள் ஒன்று சேரும் வகையில் கைகளை வைத்துக்கொண்டு காட்சியளிப்பது வாடிக்கை. பின்னாட்களில் அவரது இந்த கைகளின் அமைப்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.
கடந்த 2013 ஜெர்மனி சான்சலர் தேர்தலின்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த கை அமைப்புக்கு 'ஏஞ்சலா டைமண்ட்' என்று அவரது ஆதரவாளர்கள் பெயர் சூட்டினர். லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் டுசாட் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இந்த அமைப்புடனேயே ஏஞ்சலாவின் சிலை உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும்போது கைகளை எவ்வாறு வைத்துக்கொள்வது என்று தெரியாமல்தான் இந்த அமைப்பில் கைகளை வைத்துக் கொண்டதாக ஏஞ்சலா விளக்கம் அளித்துள்ளார். ஏஞ்சலா டைமண்ட் கை அமைப்பு பண்டைய காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட யோக முத்திரைகளில் ஒன்று என்பது பலருக்கு தெரியாத விஷயம்.நமது உடலின் இரு பாதிகளையும் கைகளின் விரல் நுனிகள் மூலமாக ஒன்றிணையும்போது மூளை செயல்பாடு சமநிலைக்கு வருகிறது.

இந்த சமநிலை தற்காலிகமாக ஏற்படும் அச்சம், பதற்றம் உள்ளிட்டவற்றை போக்கும். இந்த முத்திரையில் சில வினாடிகள் கைகளை வைத்திருந்தாலே விரல்களின் நுனியில் நாடி துடிக்கும் அதிர்வை நம்மால் உணர முடியும். இதன்மூலமாக படபடப்பு குறைந்தது மூளை சுறுசுறுப்பாக செயல்படும். இதற்காக நமது யோக வல்லுநர்கள் இந்த முத்திரையை உருவாக்கி உள்ளனர்.
இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்திலும் பலவித முத்திரைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சம்யுக்த ஹஸ்தங்கள் எனக்கூறப்படும் இரு கைகளை பயன்படுத்தி செய்யும் முத்திரைகள் பல, தற்போது யோகா ஆர்வலர்களிடையே பிரபலமாக உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த ஏஞ்சலா டைமண்ட் முத்திரை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  கல்வியில் இதை போன்ற நல்லவைகளை சொல்லி கொடுக்க வேண்டும். போலி பகுத்தறிவுடன் சொல்லப்படும் கல்வி பல இளைஞர்களை போதை குடி போன்ற சீர்கெட்ட செயல்களில் தள்ளிவிடுகிறது. இந்தியாவின் பழைய முனிவர்கள் சித்தர்கள் அவர்கள் சொல்லிய முறைகள் கல்வியில் இடம் பெறுவது நல்ல மக்களை நாட்டிற்கும் குடும்பத்திற்கும் உண்டாக்கும்.

 • குமரன் -

  நல்ல செயல்களை எல்லோரும் பின்பற்றுவது நல்லது தானே

 • Ayappan - chennai,இந்தியா

  Good practice

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  அதுதானே பார்த்தேன்.

Advertisement