dinamalar telegram
Advertisement

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு: தாமதமான சிகிச்சை; ஒழுகும் அறையால் அவதி

Share
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாமதமான சிகிச்சை மற்றும் ஒழுகும் அறை போன்ற பிரச்னைகளால் அவதி அடைந்துள்ளனர்.

மதுரை திருமால்புரம் கார்த்திக். இவரது உறவினர் ராமலிங்கத்தை தீவிர விபத்து பிரிவில் அனுமதித்த நிலையில் மாவு கட்டு போடும் ஊழியர் பாண்டி, நீண்ட நேரம் வராமல் காக்க வைத்ததாக புகார் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''மகப்பேறு வார்டு முதல் அனைத்து வார்டுகளிலும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு வேலை செய்கின்றனர். இது குறித்து டீன் ரத்தினவேலிடம் புகார் தெரிவித்துள்ளேன்'' என்றார்.

ஊமச்சிகுளம் சண்முகசுந்தரம் என்பவரும் புகார் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனக்கு மயக்கம் வந்ததால் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள 99வது வார்டில் அனுமதித்து குளுகோஸ் ஏற்றினர். அடுத்து பழைய மருத்துவமனையின் 221வது வார்டிற்கு மாற்றினர். அங்கு படுக்கை மீது மழைநீர் ஒழுகியதால் புகார் தெரிவித்தேன். ஒரு மணி நேரத்தில் என்னை 'டிஸ்சார்ஜ்' செய்து அனுப்பி விட்டனர்'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Tamilan - NA,இந்தியா

    உள் கட்டமைப்பை வலுப்படுத்த அரசுகளிடம் காசில்லை. கோடானு கோடிகள் சொத்துக்களின் அதிபதி அல்லது நிர்வாகியான தமிழர் நிர்மலா சீதாராமனிடமும் காசில்லை. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அனைவருக்கும், அரசியல் சட்ட அரசுகளுக்கும், தெரிந்த ஒன்றே ஒன்று அந்நியர்களைப்பார் என்று ஒன்று மட்டும்தான். மோடியும் மோடி அரசும் ஏகப்பட்ட சவடால்கள் விட்டுக் கொண்டேயிருக்கின்றன அதையும் பத்திரிகைகள் மூலமாக மக்களையும் நம்ப வைத்து விட்டார்கள். இனி இதையெல்லாம் ஒரு பிரச்சினை அல்லது இப்படியெல்லாம் ஒரு பிரச்சினை உள்ளது என்று கூறினால் மோடியையும் மோடி கும்பலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்துக்கே சாவு மணி அடிப்பதுதான் ஒரே தீர்வு.

Advertisement