dinamalar telegram
Advertisement

ரயில்வே ஸ்டேஷனில் தொடுதிரை கணினியை சரிசெய்ய வலியுறுத்தல்

Share
திண்டுக்கல்-திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப் பொருளாக உள்ள தொடுதிரை கணினியை பயன்பாட்டுக்குகொண்டு வரவேண்டும்' என, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியறுத்தியுள்ளது.இந்த அமைப்பின் தலைவர் சுப்ரமணியம், தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி கார் வசதி வேண்டும். முன்பதிவு இல்லாத பெட்டிகள் திண்டுக்கல்லுக்கு ஒதுக்க வேண்டும்.பழைய குட்ெஷட் பாதையில் குப்பை குவியல் மற்றும் பாதுகாப்பு சுவர் இடிந்து கிடப்பதை சரி செய்ய வேண்டும். கார் ஸ்டாண்ட் பகுதியில் காவல் உதவி மையம் தேவை. ஸ்டேஷனில் காட்சிப் பொருளாக உள்ள தொடுதிரை கணினியை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பிளாட்பாரங்களில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement