dinamalar telegram
Advertisement

பாலத்தை அடைத்து குளத்தில் நீர் சேமிப்பு

Share
எரியோடு-எரியோட்டில் நெடுஞ்சாலை பாலத்தை அடைத்து வைத்து மறவபட்டி குளத்திற்கு நீரை திருப்பி சேமித்தனர்.எரியோடு பேருராட்சி மறவபட்டி படேல் தொட்டயகவுடர் குளத்திற்கு வண்ணார் குளத்தின் மறுகால் நீர் செல்ல வாய்க்கால் உள்ளது. ஆனால் திண்டுக்கல் - குஜிலியம்பாறை வழி கரூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் பாலம் காட்டியபோது வாய்க்கால் சிதைக்கப்பட்டது. இதனால் வண்ணார் குளத்தின் மழைநீர் ரோடு பாலம் வழியே வேறு பகுதிக்கு சென்றது.சமீபத்தில் பெய்த மழையால் இப்பகுதியில் பெரும்பாலான குளங்கள் நிரம்பின. வண்ணார் குளமும் நிரம்பி வெளியேறிய மறுகால் நீர் பாலம் வழியே வேறு பகுதிக்கு செல்ல துவங்கியது. இதையடுத்து வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் அறிவுரைப்படி முன்னாள் கவுன்சிலர் ஜீவா மண் அள்ளும் இயந்திரம் மூலம் பாலத்தின் கண் பகுதியை மூடினர். வாய்க்காலையும் சுத்தம் செய்து மறவபட்டி குளத்திற்கு நீரை திருப்பினர். இதனால் தற்போது அரை பங்கு அளவிற்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement