dinamalar telegram
Advertisement

நூற்றாண்டு கண்ட பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லை

Share
சாணார்பட்டி--நூறாண்டு கண்ட வீரசின்னம்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைக்கலாம் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மாவட்டத்திலேயே ஊராட்சியில் ஒரே ஊர் மட்டும் கொண்டதால் தனி ஊராட்சி அந்தஸ்து பெற்றது.1907 ல் துவக்கப் பள்ளியாக உருவாகி, 1996 ல் நடுநிலைப் பள்ளியானது. கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 250 மாணவர்கள் படிக்கின்றனர்.இப்பள்ளிக்கு இதுவரை விளையாட்டு மைதானம் இல்லை. ஊரின் ஒதுக்குப்புறமாக கோயிலைச் சுற்றி பள்ளி அமைந்துள்ளதால் திருவிழாக் காலங்களில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.பள்ளியின் வளர்ச்சி குழு தலைவர் தனபால் கூறியதாவது: கிராம வருவாய் துறைக்கு உட்பட்ட புறம்போக்கு நிலம் 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை அகற்றி இப் பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டடம், விளையாட்டு மைதானம் அமைக்க வழங்கலாம். இதுகுறித்து பொதுமக்கள் ஒன்றிய நிர்வாகத்திலும், கல்வித்துறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement