dinamalar telegram
Advertisement

சிறுமலையில் சுற்றுலா வாகனங்களிடம் வசூல்

Share
திண்டுக்கல்-திண்டுக்கல் சிறுமலைக்கு வரும் சுற்றுலா வாகனங்களிடம் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ளது மினி கொடைக்கானல் எனும் சிறுமலை. கடல்மட்டத்தில் இருந்து 1600 மீட்டர் உயரத்தில் 18 கொண்டை ஊசி வளைவுகளுடன் இயற்கை எழில் சூழ உள்ளது.இங்கு விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். வெளியூர் வாகனங்களை வனசோதனை சாவடியில் தணிக்கைக்கு பின்பே அனுமதிக்கின்றனர். இங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க, 'சிறுமலை சூழல் மேம்பாட்டுக் குழு' அமைக்கப்படடுள்ளது.இக்குழு சார்பில் வனத்தை பாதுகாத்தல், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நேற்று (டிச.4) முதல் வனச்சோதனை சாவடியில் வாகனங்களுக்கான பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.டூவீலருக்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50, கனரக வாகனங்களுக்கு ரூ.100, மண் அள்ளும் இயந்திரம், போர்வெல் வாகனங்களுக்கு ரூ.500 வசூலிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement