dinamalar telegram
Advertisement

பேரூர் குளத்தில் ஆக்கிரமிப்பு :நில அளவைத்துறை சர்வே

Share
Tamil News
கோவை:பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளக்கும் பணியில், நிலஅளவைத்துறையினர் ஈடுபட்டனர்.நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அறிக்கையாக தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அறிக்கை சமர்ப்பிக்க, தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டிருக்கிறார்.கோவை மாவட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத்துறையினர், நேற்று அளக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், பேரூர் சுண்டக்காமுத்துார் குளம், 265 ஏக்கர் பரப்பு கொண்டது. குளத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் ஆக்கிரமித்து, கரும்பு, வாழை, தென்னை பயரிட்டு, சொட்டு நீர் பாசனம் செய்திருக்கின்றனர்.100க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், நீர்த்தேக்கும் பரப்பு சுருங்கியிருக்கிறது. நிலத்தை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைக்கற்கள் நட வேண்டுமென, விவசாயிகளில் ஒரு தரப்பினர் கோரினர். பொதுப்பணித்துறையினர், இழுத்தடித்துக் கொண்டே வந்தனர். ஐகோர்ட் உத்தரவு, தலைமை செயலர் அறிவுறுத்தலை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அளந்தனர். இப்பணி இன்றும் தொடர்ந்து நடைபெறும் என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் கூறுகையில், 'நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. புல வரைபடத்தின் படி அளந்து எல்லைக்கற்கள் நடப்படும். பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாகாத வகையில், கரை பலப்படுத்தப்படும்' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Dr G Ranganathan - Coimbatore,இந்தியா

    ஆக்கிரமிப்புகள் தயவின்றி அகற்றப்பட வேண்டும்.

Advertisement