dinamalar telegram
Advertisement

பெண்ணிடம் தவறாக நடந்த டாக்டர் மீதான குற்றச்சாட்டு உறுதி

Share
மதுரை:மதுரை அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையில் நவம்பர் 26ம் தேதி 26 வயது இளம்பெண் தன் தாயுடன் ஸ்கேன் பரிசோதனைக்கு வந்தார். அன்று பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்துவிட்டு, சந்தேகம் இருப்பதாக கூறி மறுநாள் மீண்டும் வருமாறு கூறியுள்ளார்.

மறுநாள் 27ல் தாயுடன் மீண்டும் ஸ்கேன் பரிசோதனைக்கு அப்பெண் வந்தார். அப்போது தாயாரையும், அறையில் இருந்த நர்ஸையும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு டாக்டர் பரிசோதித்தார். 15 நிமிடங்கள் கழித்து ஸ்கேன் அறையில் இருந்து அழுது கொண்டே வந்த அப்பெண், டாக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கதறினார்.

இதுகுறித்து அவரது தாயார் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு துறைத்தலைவர் சுந்தரி, டீன் ரத்தினவேலிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. டாக்டர் மீதான குற்றச்சாட்டு உண்மை எனத்தெரிந்தது.

இது குறித்த அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் டாக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement