dinamalar telegram
Advertisement

மருத்துவமனையில் சுகாதாரம் சுத்தம்!

Share
தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை, நுாறாண்டு கடந்த பெருமைக்குரியது. சுற்றுவட்டாரத்தில் உள்ள, 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். நாள்தோறும் சராசரியாக, 450 புறநோயாளிகளும், 50 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். எக்ஸ்ரே, மகப்பேறு, அறுவை சிகிச்சை மையம் என, பல வசதிகளும் உள்ளன. அவ்வசதிகளை பயன்படுத்தும் வகையில், மனித ஆற்றல் மிகக்குறைவாக உள்ளது.இரவு நேரங்களில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, இரவு நேர டாக்டர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.பல ஆண்டுகளாக, 3 துாய்மை பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், மருத்துவமனையை துாய்மையாக பராமரிப்பதில், சிரமம் ஏற்பட்டு வருகிறது. தினக்கூலி மற்றும் பேரூராட்சி துாய்மை பணியாளர்களை கொண்டு, அவ்வப்போது மட்டுமே, மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் நிலை உள்ளது.சுகாதாரத்தை பேணும் இடத்தில், துாய்மை பணியாளர்கள் அவசியம் என்பதை உணர்ந்து, விரைவில் மருத்துவமனைக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement