மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று: இந்தியாவில் பாதிப்பு 4 ஆக உயர்வு
ஆமதாபாத்: மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் பாதிப்பு 4 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கோவிட் வைரசின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல் நிலை தொடர்பாளர்கள், இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில், ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது மாதிரிகளை, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனை குஜராத் மாநில சுகாதாரத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவிலிருந்து மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று வகை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (4)
ஓமைக்ரான் வராது. வந்தாலும் பரவாது. பரவுனாலும் பாதிப்பு இருக்காது. பெருசா பாதிச்சாலும் யாரும் சாக மாட்டாங்க. செத்தாலும் கணக்கில் எடுத்துக்க மாட்டோம்.
இதுக்கு ஒரு விடிவு காலம் கிடையாதா
திங்கக்கிழமைக்குள்ள சட்டுபுட்டுன்னு கணிசமான ஒரு எண்ணிக்கை கொண்டு வந்துட்டு மறுபடியும் பள்ளி கல்லூரிய இழுத்து மூடலாம் ..இன்னொரு லாக்டௌன் பார்சல் ப்ளீஸ் ..
ஒமிகரான் வந்தால் ஜனவரி 13 க்கு முன்பு வருவதற்கு சான்ஸே இல்லை. அதற்கு தெரியாதா கிருஸ்துமஸ், புதவருட பிறப்பிலெல்லாம வரக்கூடாதென்று..