dinamalar telegram
Advertisement

முதல்வருக்கே தண்ணி காட்டும் மாநகராட்சி: பிரச்னைகளை தீர்க்காமலே தீர்த்ததாக பதில்!

Share
கோவை: கோவையில் இருந்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுவுக்கு மாநகராட்சியில் இருந்து, விண்ணப்பதாரருக்கு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், தீர்வு காணப்படவில்லை.

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், உக்கடம் பெரிய குளத்தில், ரூ.62.17 கோடியில் பொலிவூட்டும் பணிகளை, கோவை மாநகராட்சி மேற்கொள்கிறது. இக்குளத்தில் இருந்து உபரி நீரை, வாலாங்குளம் மற்றும் சிங்காநல்லுார் குளத்துக்கு அனுப்ப வேண்டும். தென்கிழக்கு பகுதியில் உள்ள மதகு வழியாக திருப்பி விட்டால், கரும்புக்கடை மற்றும் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறும்.இதில், குளம் நிரம்பி உபரி நீர் செல்லக்கூடிய மிகைபோக்கி பகுதி புதுப்பிக்கப்பட்டு, நொய்யல் ஆற்றுக்கே தண்ணீர் திரும்பிச் செல்லும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், வாலாங்குளம் மற்றும் சிங்காநல்லுார் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடும் மதகு பகுதிகளை இன்னும் சீரமைக்கவில்லை.

கோரிக்கை விடுத்தும் பயனில்லைநஞ்சுண்டாபுரம் வாய்க்காலில் தண்ணீர் விட்டால், பாசன வசதி பெறும் என்பதால், உக்கடம் பெரிய குளம் பாசன மற்றும் கிராம விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சங்கத்தை சேர்ந்த, விவசாயி கிருஷ்ணசாமி என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் அனுப்பினார். அங்கிருந்து, மாநகராட்சிக்கு அக்கடிதம் பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கு, மாநகராட்சி நகர பொறியாளர் (பொ) ராமசாமி பதில் அனுப்பியிருக்கிறார்.அதில் கூறியிருப்பதாவது:
உக்கடம் பெரிய குளத்தில் உடைந்திருந்த களிங்கு பகுதி புதுப்பிக்கப்பட்டு, இரு கரைகளையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. செல்வசிந்தாமணி, சேத்துமா வாய்க்கால் வழியாக வரும் கழிவு நீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது; 90 சதவீத பணி முடிந்து இயங்கும் நிலையில் இருக்கிறது.வாலாங்குளத்துக்கு செல்லும் மதகு இயங்கும் நிலையில் இருக்கிறது. மற்ற பகுதிகளில் உள்ள மதகுகள் ஏற்கனவே மூடப்பட்டு இருந்தன.இதன் வழியாக ஏற்கனவே விவசாயத்துக்கு திறந்து விட்டிருக்கலாம். இது, பொதுப்பணித்துறைக்கே தெரியும். உபரி நீர் வாலாங்குளம் மற்றும் நொய்யல் ஆற்றுக்கே செல்கிறது.இவ்வாறு, பதில் கூறப்பட்டுள்ளது.
அரசு துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்புகின்றனர். அங்கிருந்து அனுப்பும் மனுக்களுக்கு நிரந்தர தீர்வு காணாமல், கோரிக்கை ஏற்கப்பட்டது என பொத்தாம் பொதுவாக தெரிவித்து, பதில் மட்டும் குறிப்பிட்டு, கோப்புகளை மூடி விடுகின்றனர்.
முதல்வரையே ஏமாற்றும் செயல்முதல்வரின் தனிப்பிரிவுக்கு, தங்களது பிரிவில் இருந்து வந்த மனுவுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என பதில் அனுப்பி விடுகின்றனர். ஆனால், களத்தில் தீர்வு காணாமல் இருப்பது, முதல்வரின் கவனத்துக்குச் செல்வதில்லை.விவசாயி கேட்ட கோரிக்கை, உபரி நீர் செல்லும் மதகை சீரமைத்து, வாய்க்காலை புதுப்பிக்க வேண்டும் என்பதே. ரூ.62.17 கோடி செலவிடும் மாநகராட்சி, மதகு பகுதியை சீரமைக்க முயற்சி செய்யாமல் இருப்பது, 'ஸ்மார்ட் சிட்டி' நிதியை வீணடித்து வருவதை, வெளிப்படையாக காட்டுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (17)

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  இந்த நாட்டில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அவர் செய்யும் குற்றங்களுக்கு பதவியில் இருக்கும் வரை குற்றவியல் வழக்கு தொடர முடியாது என. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் குடியரசுத் தலைவராக பாவிக்கப்பட்டு அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லாததால் பொய் சொல்வது, நாட்டின் நிதியை கொள்ளையடிக்கவிட்டு ஆதாயம் அடைவது மக்களை உயிருடன் கொல்வது போன்ற துணிந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  வடிவேலுவின் கிணறு காணோம் கதை பரவாயில்லை.

 • ... - ,

  தண்ணீ மேல லாரியை ஏ த்து வான் நம்மாளு... பாட்டு வந்து போகுது....

 • ... - ,

  வெள்ள த்து க்கு டீ குடிக்கிற வரு... அவருக்கே தண்ணீ காட்டுறாங்க பா...

 • Sivagiri - chennai,இந்தியா

  ஆக - அவரு நல்லவரு , வல்லவரு , எளிமையானவர் , தேசபக்தர் , காந்தியவாதி , மகாயோக்கியரு , சொன்னதெல்லாம் செய்வாரு , திறமையானவரூ , நாட்டுக்கு சேவை செய்வதே லட்சியம்-வேற சிந்தனையே இல்லாதவரூ - ன்னு சொல்ல வர்றீங்க . . . என்னங்க நீங்க , பெருச்சாளிக்கு தெரியாத சுண்டெலியா ? ? . . .

Advertisement