உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி; நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு விவரங்கள் சேகரிப்பு

உயர்நீதிமன்றத்தில் தாக்கலான பொது நல வழக்கு ஒன்றில் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு விவரங்களை தலைமை செயலர் மூலம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.இம்மாவட்டத்தில் பொதுப்பணி, உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் ஊருணிகள், குளங்கள் உள்ளன. இவற்றில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன.இந்த ஆக்கிரமிப்பு விவரங்களை அனுப்ப கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சிகளிலுள்ள கண்மாய்கள், ஊருணிகள், வரத்துக்கால்வாய்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், அவற்றின் புல எண்கள், பரப்பளவு, எந்தவிதமான ஆக்கிரமிப்பு உள்ளது உள்ளிட்ட விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்களுடன் ஆலோசித்து உடனடியாக அனுப்ப ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு வழங்காத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பி.டி.ஒ.,க்கள், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரைக்கு தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஆக்கிரமிப்பு விவரங்களை வருவாய்த்துறையினருடன் இணைந்து ஊரக வளர்ச்சி துறையினர் சேகரித்து வருகின்றனர்.மேலூர் தாலுகாவிற்குட்பட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆர்.டி.ஓ., பிர்தௌஸ் பாத்திமா, தாசில்தார் இளமுருகன், பி.டி.ஓ.,க்கள் ஜெயபாலன், செல்லபாண்டியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இந்த விவரங்கள் தலைமை செயலர் மூலம் உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதுடன், ஆக்கிரமிப்பு என தெரியும் பட்சத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விரைந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (16)
இப்படி தான் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீமை கருவேலை மரங்களை அழிக்க உயர் நீதி மன்றம் பயரங்கமான சட்டங்களை பிறப்பித்தது. இப்பொழுது அது கிடப்பில் போடப்பட்டது. சீமை கருவேலை வழக்கம் போல் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன
எல்லாமே பொய்யான ரிப்போர்ட்டுகள்.. கண்மாயை ஆக்கிரமித்து கல்லூரிகள் பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் வீடுகள் என பலப் பல கட்ட்டப்பட்டுள்ளன.. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்குகள் தொடுக்கப்பட்டது.. ஆனால் சில பணம் படைத்தவர்கள் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என பொய்யான சான்றிதழ்களை தாசில்தார்களிடம் பெற்றும் கேசையே க்ளோஸ் பண்ணிவிட்டார்கள்.. இது போன்ற கேஸ்கள் பலப்பல....
ஒன்றுமே நடக்காதது. அறிக்கை வரும். நீதிபதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்வார்கள். விடியா அரசு உடனே பட்டா போட்டுக் குடுத்து சீர் செய்து விடுவார்கள். நீதி மன்றம் அடுத்த வேலையை பார்க்கச் செல்லும்.
கடந்த 10 ஆண்டுகளில் இது போல் கோர்ட் போட்ட ஆர்டர் அனைத்தையும் பட்டியலிட்டு அதன் மேல் அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன என்று தெரிந்து முறையாக நடவடிக்கை எடுத்துள்ளதா நீர் நாளை அக்கிரமிப்பு அகற்ற பட்டதா என்று பட்டியலிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இல்லயேல் இது ஒரு கண் துடைப்பு ஆணை.எந்த பயனும் இருக்காது.
ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் மக்கள் அதிகாரிக்கு மனு கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை காரணத்தினால் பொதுநல வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்து மறுபடியும் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகள் இன்னமும் இருக்கிறார்கள்