dinamalar telegram
Advertisement

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ராஜ்யசபாவில் தி.மு.க., மசோதா

Share
புதுடில்லி : லோக்சபாவில் நேற்று 153 தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க., - எம்.பி., வில்சன், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரும் மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் பொது விவகாரம் குறித்து தனிநபர் மசோதா தாக்கல் செய்வது வழக்கம். லோக்சபாவில் நேற்று, காங்., - எம்.பி., சசிதரூர், தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த மசோதாவை தாக்கல் செய்தார்.அக்கட்சியின் மற்றொரு எம்.பி., மணீஷ் திவாரி, புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குறித்த மசோதாவை தாக்கல் செய்தார்.
பா.ஜ., - எம்.பி., ரமேஷ் பிதுரி, பாடத்திட்டங்களில் பகவத் கீதையை கட்டாயமாக்க வேண்டும் என்ற மசோதவையும், தேசியவாத காங்., - எம்.பி., சுப்ரியா சுலே, ஊழியர்கள் வேலை நேரத்துக்கு பின் அலுவல் சார்ந்த போன் அழைப்புகள் மற்றும் இ மெயில் ஆகியவற்றுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்ற மசோதாவையும் தாக்கல் செய்தனர். லோக்சபாவில் நேற்று மட்டும் மொத்தம் 153 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ராஜ்யசபாவில் தி.மு.க., - எம்.பி., வில்சன், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (82)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  முதல் கையெழுத்து நீட் ஒழிப்புக்காகத்தான் என்று சொன்னவர்கள் வாக்காளர்களை ஏமாற்ற அல்லாடுகிறார்கள் பரிதாபம்

 • theruvasagan -

  அப்ப சட்ட சபையில ஒருமனதா கெத்தா நிறைவேத்தின மசோதாவால ஒரு பிரயோசனமும் கிடையாதா. இது எப்படி இருக்குன்னா கயிறு கட்டி இழுத்தாலே நகராததை நான் முடிய கட்டி இழுக்குறேன் பாருன்னான்னா ஒருத்தன். இதுவும் வேலைக்காகம போனா அடுத்தாப்படி புறா கால்ல ஓலையை கட்டி அனுப்பறதா இருக்குமோ. இப்படியே அஞ்சு வருஷத்துக்கு உருட்ட ஏகப்பட்ட ஐடியாஸ் ஸ்டாக்ல இருக்கும் போல.

 • Tamilan - NA,இந்தியா

  தேவையில்லாமல் ஏன் முயற்சிக்கிறார்கள்? தமிழர்களை கேணையர்கள் என்று நினைப்பதுதான் இதெற்கெல்லாம் காரணம். இவர்கள் ஆதரவு திரட்டிவிட்டார்களா? அல்லது ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்களா ?

 • theruvasagan -

  தமிழகக்துல இருக்குற மருத்துவ கட்டமைப்பு அம்புட்டு ஒஸ்தின்னா அப்புறம் எதுக்கு டிரீட்மென்டுக்கு லண்டன் அமெரிக்கா சிங்கப்பூருக்கு ஓடணும். அது கூட வேண்டாம். இங்கியே ஓடம்புக்கு ஒண்ணுன்னா தனியார் அதுவும் கார்பொரேட் ஆஸ்பத்திரிக்குத் தானே போறாங்க. பதவியில் இருக்கிற ஆல்லது பதவியில் இல்லாத எந்த அரசியல்வியாதியாவது கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ல சிகிச்சை எடுத்துக்கிறதா கேள்விபட்டிருக்கோமா.

 • லாநா -

  இங்குள்ள பதிவுகளை பார்க்கும் போது நாம் ஏன் நீட் ஐ எதிர்கிறோம் என புரிகிறது. ஆனால் உண்மை வேறாக உள்ளன. நீட்க்கு முன்னும் பின்னும் 85 இடம் அந்தந்த மாநில மக்களுக்கே. 15 அகில இந்திய அளவிலானது. இதில் எங்கிருந்து தமிழக இடம் மற்ற மாநில மக்களுக்காக போகிறது. இந்த அடிப்படை கூட புரியாத இவர்கள் எப்படிப்பட்ட புத்திசாலித்தனமான மக்கள்.

Advertisement