dinamalar telegram
Advertisement

ஒமைக்ரானை நினைத்து பீதி வேண்டாம்: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

Share

ஜெனிவா : உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், “ஒமைக்ரான் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம். தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டுமா என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் சொல்ல முடியாது” என்றார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் கலந்துக்கொண்டு சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: ஓமைக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று கணிக்க இயலாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரட்டிப்பாகிறது.


நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் பீதி அடையாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் ஓரு வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலையிலிருந்து நாம் மாறுபட்டு உள்ளோம். தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.


உலகளவில் 99% நோய்த் தொற்றுக்கு டெல்டா வகை காரணம். இந்த உருமாறிய வைரஸும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் தற்போது கணிக்க முடியாது. நாம் காத்திருக்க வேண்டும்.


இது சாதாரணமானது என நம்புவோம். இவ்வளவு சீக்கிரம் ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் வகை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. இவ்வாறு பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (15)

 • Tamilan - NA,இந்தியா

  பீதி அடைய வேண்டியதில்லை . விஞ்சான ரீதியாக மூக்கு வாய்க்கு ஒரு ப்லாட்த்திரியை போட்டுக்கொண்டு , யாரையும் தொடாமல் இடைவெளிவிட்டு விஞ்சான தீண்ண்டாமையை மறக்காமல் கடைபிடிக்கவேண்டியதுதானே ?. வருடம் முழுவதும் கடைபிடிக்கவேண்டியதுதானே ?. உலகளாவிய பொருளாதார கும்பல்கள், கார்பொரேட் கொள்ளையர்கள் ,சந்தையில் உள்ள பொருளாதார ரவுடிகள் குன்றகளுக்கு தங்கள் பணத்தை வாரியிறைத்து விட்டு இழைத்த வாயர்களைப்போல் திரிய வேண்டுயதுதான் . விஞ்சான தீண்டாமை பிளாஸ்திரி போட்டுக்கொண்டதால் மக்கள் இளித்தவாயர்கள் என்பது யாருக்கும் தெரியாது .

 • முருகன் -

  பீதி அடையாமல் பிறகு என்ன மகிழ்ச்சியாக வா இருக்க முடியும். மக்களை குழப்பத்தில் வைப்பதே வேலை.

 • Senthil Kumar - Port Blair,இந்தியா

  நீங்க பயப்பட வேண்டாம்னு சொன்னதால்தான் எங்களுக்கு பயமாக உள்ளது😂

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்தம்மா இப்படி சொல்லுறாங்க, வேறு ஒரு அம்மா அங்கே இருந்து ரொம்ப டேஞ்சர் என்று சொல்லுறாங்க. கொரோனாவை சீனா அழகாக உலகெங்கும் பரப்பி, அதுக்கு மருந்து கண்டுபுடித்துவிட, இப்போ சீனா தனது நடப்பு நாடான ஆபிரிக்கநாட்டில் இருந்து வேறுவகை வைரஸை தனது பெயர் வராமல் என்று ஆபிரிக்கநாட்டில் இருந்து பரப்புது. இனி இதுக்கு மருந்துகண்டுபிடிக்க, அடுத்து ஒரு வைரஸை தனது நட்புநாடான இலங்கையில் இருந்து பரப்பும், இப்பிடியே இனி காலமெல்லாம் ஊசி போட்டு, போட்டு சிவலோக பதவிதான் ....

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  இந்த அம்மா சனாதன கும்பலை சார்ந்தவர். ஆரிய வந்தேறி. இங்கிருந்து வெளி நாட்டிற்க்கு டாலர் சம்பாதிக்க சென்றவர். நாங்கள் பகுத்தறிவு பரம்பரை. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பவருக்கு படையல் பூசை போடும். தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்றவர்க்கு மூலைக்கு மூலை சிலை வைத்து ஆராதனை செய்வோம் இந்த அம்மா சொல்வதை கேட்க்கமாட்டோம். ராகுல் பையா ( ஹிந்தியில் பையா என்றால் அண்ணன் என்று பொருள்.) சொல்வதை தான் நம்புவோம். மோடி சோர் ஹை. ஹிந்தி தெரியாது போடா.

Advertisement