dinamalar telegram
Advertisement

இம்ரான் கானுக்கு எதிராக பாக்., தூதரகத்தின் சமூக வலைதள கணக்கில் கருத்து

Share
இஸ்லாமாபாத் : செர்பியாவில் உள்ள பாக்., துாதரகத்தின் சமூக வலைதள கணக்கில் விஷமிகள் புகுந்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு செர்பியா. இங்குள்ள பாக்., துாதரகத்தின் சமூக வலைதள கணக்கில் நேற்று திடீரென பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான கருத்துகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானில் இதுவரை இல்லாத வகையில் பணவீக்கம் உச்சத்திற்கு சென்றுள்ளது. அரசு அதிகாரிகளாகிய நாங்கள் எவ்வளவு நாட்கள் தான் வாய்மூடி மவுனமாக பணியாற்றிக் கொண்டிருப்பது.மூன்று மாதங்களாக எங்களுக்கு ஊதியம் தரவில்லை. பள்ளிக் கட்டணம் கட்ட முடியாததால் எங்கள் குழந்தைகளை வகுப்பறையில் உட்கார விடாமல் வெளியே அனுப்புகின்றனர்.
இதுவா உங்கள் புதிய பாக்.,? எங்களை மன்னியுங்கள் இம்ரான். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலுடன், இம்ரான் கான் அடிக்கடி பயன்படுத்தும் 'நாம் கவலையே படக்கூடாது' என்ற வார்த்தையை கிண்டல் செய்யும் பாட்டும் இணைக்கப்பட்டிருந்தது.

சமூக ஊடகங்களில் இந்த செய்தி வேகமாக பரவியதும், பாக்., அரசு, உடனடியாக அதை நீக்கியது. கணினி விஷமிகள் சிலர் செர்பியாவில் உள்ள பாக்., துாதரக சமூக வலைதள கணக்கில் ஊடுருவி, அவதுாறு செய்தி பரப்பி இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பாக்., அரசு கூறியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • விஜய் -

    முதல்ல செர்பியாவிலே இவனுங்களுக்கு எதுக்கு தூதரகம்.....? ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துனா இப்டிதான் நடக்கும். அறிவுகெட்ட நிர்வாகம்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    அரசு அதிகாரிகளுக்கே மூன்று மாதம் சம்பளம் பாக்கி. வெட்கமாயில்லை இம்ரான் கான்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    இம்ரான்கான் இணையில்லா தலைவர் என்ற ஹேஷ்டேக்கை இன்று தன்மான தமிழர்கள் ட்ரெண்ட் செய்வார்கள்.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    ட்விட்டர் CEO சேர்பியாவில் தான் இந்த வீடியோ வெளிப்பட்டதாக அறிவித்துள்ளார் ..

Advertisement