dinamalar telegram
Advertisement

குழந்தைகளுக்கான தடுப்பூசி: மத்திய அமைச்சர் தகவல்

Share
புதுடில்லி ;“குழந்தைகளுக்கான மூன்று கொரோனா தடுப்பூசிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன,” என, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பவார் கூறியதாவது: தற்போது 12 - 18 வயதுக்கு உட்பட்டோருக்காக, 'சைடஸ் கேடிலா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள 'சைகோவ் - டி' தடுப்பூசிக்கு மட்டுமே அவசர காலத்தில் பயன்படுத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. இதைத்தவிர குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மேலும் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, 2 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் குழந்தைகளுக்காக 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' நிறுவனம் தயாரித்துள்ள, 'கோவிஷீல்டு' தடுப்பூசியும், 'பயாலஜிக்கல் - இ லிமிடட்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசியும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தடுப்பூசிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகள் மற்றும் தரவுகள் அடிப்படையில் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    சரத் பவரின் (ஒரே வகுப்பு) தேசிய"வாத" காங்கிரசில் இருந்து பிஜேபிக்கு வந்து சேர்ந்தவர் இவர் சொல்வதை நம்பலாமா ?

Advertisement