dinamalar telegram
Advertisement

நடிகை கங்கனாவின் காரை தடுத்து நிறுத்திய விவசாயிகள்: மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

Share
புதுடில்லி: பஞ்சாபில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சென்ற காரை மறித்த விவசாயிகள், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்ற மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என, பாலிவுட் நடிகை கங்கனா தொடர்ந்து விமர்சித்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் பகுதியில், பாதுகாப்பு அதிகாரிகளுடன் கங்கனா ரணாவத் இன்று (டிச.03) காரில் சென்றார். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காரை மறித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் கங்கனா, ''குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லியில் போராட்டம் நடத்தியவர்களை தான் விமர்சித்தேன், விவசாயிகளை எதுவும் கூறவில்லை,'' என்றார். இதையடுத்து அவரது கார் செல்ல விவசாயிகள் வழிவிட்டனர்.

இது பற்றி கங்கனா கூறுகையில், ''பஞ்சாபில் ஒரு கூட்டம் என் காரை மறித்து, என்னை தகாத வார்த்தைகளால் திட்டியது. பாதுகாப்பு அதிகாரிகள் இல்லையெனறால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  அவர் சொல்லியதில் என்ன தவறு? காலிஸ்தானிகள் பயங்கரவாதிகள் தான். அவர்களின் பயங்கரவாதத்தினால்தான், இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேர்ந்தது. நன்றாக பூச்சியை நசுக்குவது போன்று காலிஸ்தானிகளை நசுக்கினார். பழிவாங்குவதாக நினைத்து இந்திரா காந்தியை இதே காலிஸ்தானிகள் கொன்றபோது, காங்கிரெஸ்க்காரர்கள் வீறுகொண்டு எழுந்து, இவர்களை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்தனர். அதில் அப்பாவி சீக்கிய குடும்ப பெண்களும் குழந்தைகளும் பலியாயினர் என்பது சோகமான விஷயம் - அது ஒரு பக்கம் இருந்தாலும், அவ்வாறு அராஜகங்களுக்கு உட்பட்ட அதே சீக்கியர்கள் இன்று வரை வெட்கமே இல்லாமல், காங்கிரஸுக்கு வோட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தி அவர்கள் ஆட்சியில் வாழ்ந்துவருகிறார்கள். இந்நிலையில், காலிஸ்தானிகளை பற்றி கங்கனா கருத்து தெரிவித்தால், போராடும் "விவசாயிகளுக்கு" கோபம் வருகிறது என்றால், இவர்களிடையே உள்ள தொடர்புதான் என்ன? அது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லாத ஒரு கும்பலுக்கு, அரசு கடுமையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல், நல்லதனமாக நடந்துகொண்டால், எவ்வளவு தைரியம் வருகிறது என்று பார்க்கும்போது மிகவும் வியப்பாக இருக்கிறது.

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  தைரியசாலி கங்கனா ..அரசியலுக்கு வந்து பிரியங்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் ...

 • பேசும் தமிழன் -

  இது என்ன வேண்டாத வேலை... அப்போ ராகுல் காரை இந்திய மக்கள் அனைவரும் மறிக்க வேண்டும்.... ஏனெனில் அவர் எப்போதும் நாட்டையும் நாட்டு மக்களையும் கேவலமாக பேசி கொண்டு திரிகிறார்

 • தமிழன் - Madurai,இந்தியா

  பஞ்சாப் விவசாயி விவசாயத்த தவிர எல்லா வேலையும் பண்றாப்புல.

 • Soumya - Trichy,இந்தியா

  பயங்கரவாதிகள் எப்போது விவசாயியானானுங்க ஹீஹீஹீ

Advertisement