Load Image
dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Tamil News
ADVERTISEMENT
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா: அ.தி.மு.க.,வின் இன்றைய நிலையை பார்க்கும் ஒவ்வொரு தொண்டனின் நெஞ்சமும் குமுறுகிறது. கட்சி மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்கள் நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது. அ.தி.மு.க., நிலை மாறும்; தலை நிமிரும்; இது உறுதி. என் உயிர்மூச்சு உள்ளவரை கட்சியை காத்து, தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை நான் ஓய மாட்டேன்.


'டவுட்' தனபாலு: இதைவிட நீங்கள் உருக்கமாகவும், உறுதியாகவும் அறிக்கை விட்டாலும், தொண்டர்களின் வீடுகளுக்கு சென்று சத்தியம் செய்தாலும், கட்சியினர் உங்களையும், உங்கள் குடும்பத்தினர் பேச்சையும் நம்பமாட்டார்கள் என்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், 'அந்த நான்கு ஆண்டு ஜெயில்' கதையை அவர்கள் இன்னும் மறக்கவில்லை.


அ.தி.மு.க., ஒருங்கிணைப் பாளர் பன்னீர்செல்வம்: தமிழகத்தில் பல நுாற்றாண்டுகளாக, சித்திரை மாத பிறப்பு தான், தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த மரபை சீர்குலைக்கும் விதமாக, தி.மு.க., ஆட்சியின் செயல்பாடு உள்ளது. எந்த பண்டிகையை, எப்போது கொண்டாடுவது என்பதை, மக்களின் விருப்பத்திற்கு விடுவதே நல்லது.


'டவுட்' தனபாலு: தமிழகத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்கின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் சித்திரை முதல் நாளும், தி.மு.க., ஆட்சியில் தை முதல் நாளும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட அறிவிப்பு வெளியாகிறது. எனினும், மக்கள் இவ்விரு கட்சிகளையும் நம்புவதில்லை. வழக்கம் போல, சித்திரை முதல் நாளை புத்தாண்டாக விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றனர். எனவே, இந்த கட்சிகளின் அறிவிப்புகளும், பிரசாரங்களும், சட்டங்களும் வீண் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலர் சண்முகம்: தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடலுார் மாவட்டத்தில் ௧ லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால் பாதிப்பை மிக குறைவாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தவில்லை. பயிர் பாதிப்புகளை மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.


'டவுட்' தனபாலு: தி.மு.க.,வுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான உங்களிடம், தமிழக ஆட்சியாளர்கள் கருத்து ஏதும் கேட்கவில்லை என்ற கோபத்தில், மறு கணக்கெடுப்பு கோருகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. உங்களை பற்றி, தி.மு.க.,வினரிடம் கேட்டால், 'இந்த கம்யூ.,க்களுக்கு வேறு வேலை இல்லை...' என்கின்றனரே... உண்மை தானா?
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    விருப்ப மனு கொடுக்க நாள் குறிப்பார்களாம் இந்த இருவர் மட்டுமே கொடுப்பார்களாம் மீறி வருபவர்களை அடித்து விரட்டுவார்களாம் ஆனால் அதிமுகவில் தான் ஜன நாயகம் பின்பற்றப்படுகிறதாம் ஜோக் அடிக்க கூட கொஞ்சம் எல்லை வைத்துக்கோங்க

  • gopal - chennai,இந்தியா

    எவன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடட்டும் . உண்மையான நல்ல தமிழர்கள் சித்திரை ஒன்றையே புத்தாண்டாக கொண்டாடுவார்கள் .

Advertisement