dinamalar telegram
Advertisement

கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

Share
சென்னை: கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்பயப்டுகிறது.


இந்த ஆண்டில் முதல்கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ஏழு சதவீத வட்டியுடன் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • R Ravikumar - chennai ,இந்தியா

    இவர்கள் யார் .. என் வரி பணத்தில் அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய ? எனக்கு தெரிந்து தொண்ணுறு சதவீதம் எந்த மகளிர் குழுவும் வேலை செய்வது இல்லை . குழு மக்கள் ஒரே தெருவில் வசிப்பதால் .. போட்டி , பொறாமை , யார் பெரியவள் , யார் எந்த ஜாதி, யார் வசதி உடையவர் , யார் அரசியல் / அதிகார பக்க பலம் உள்ளவர் என்பதை பொறுத்து தான் அங்கு வேலை நடக்கிறது / ஆகிறது . அதை விட கேவலம் .. வட்டி தொழில் தான் நடக்கிறது , இப்போது அதில் இடை செருகல் ஆக கட்ட பஞ்சாயத்து ம் நடக்கிறது . நகை சீட்டு தான் கட்டு கிறார்கள் . தொழில் ஏதும் நடக்கவில்லை . இதை அரசு வழிமுறை படுத்த வில்லை என்றால் இது பெரிய ஊழல் இயக்கமாக உருவெடுக்கும் . எனக்கு தெரிந்த குழு தலைவிகள் எனது ஊரில் எல்லாம் கோடிஸ்வரிகளாக , லட்சதீபதிகளாக ஆகி கொண்டு இருக்கிறார்கள் .. ஆனால் தொழில் முன்னேற்றம் அறவே இல்லை . இது போன்று கடன் தள்ளுபடி செய்வது மோசமான முன் உதாரணம் ஆகி விடும் . ஒரு வங்கி மேனேஜர் .. எதற்கு குழு தலைவியை பார்த்து பயப்பட வேண்டும் ? மகளிர் குழு ஊழல் வங்கி வரை உள்வாங்கி இருக்கிறது .குழு தலைவிகள் . கவுன்சிளர் , பஞ்சாயத்து தலைவர் , வக்கீல் போன்றோருடன் எப்போதும் இணைப்பில் இருக்கிறார் . வெளிப்படையாக தெரிகிறது ஊழலை மறைக்க வேலை நடக்கிறது என்று . எனக்கு வெட்கமாக இருக்கிறது . நம் தமிழ் நாட்டில் எந்த தொழிலையும் ஒரு " அன்னன் " தடுப்பார் அல்லது கம்யூனிசம் தடுக்கும் அல்லது தமிழ் போராளிகள் என்ற பெயரில் ஒரு கும்பல் வந்து நிற்கும் . என்னை போன்ற மக்கள் வட இந்தியா , வளைகுடா நாடுகளுக்கு சென்று சம்பாதிப்பதை .. இவர்கள் மகளிர் குழு கடன் தள்ளுபடி , விவசாய கடன் தள்ளுபடி என்று வரி பணமாக எடுத்து கொள்வது எந்த விதத்தில் நியாயம் ?

  • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

    எல்லா கடனையும் தள்ளுபடி செய்யுங்கள். இலவச பொருட்களை வழங்கி கடைசியில் தமிழகத்தை அடகு வையுங்கள்.

  • Mohan - Thanjavur ,இந்தியா

    இதெல்லாம் சரியா படலை. நல்லவாயன் சம்பாரிக்க நாற வாயன் சாப்பிடுற கதையா இருக்கு.

  • RajanRajan - kerala,இந்தியா

    அம்புடுதேன். கோவாலபுரத்து விடியல் தமிழகத்தை திவாலாக்கியே தீருவோம்னு சதி திட்டம் தீட்டுறானுக்கடோய்.. இவன் தள்ளுபடி பண்ணுற கடன் வித்தையாலே கடன் வாங்காமல் உழைத்து வாழ்பவர்களை திவாலாக்கி தெருவும்திண்ணையுமாக்கிடுவன். வாழ்க அண்ணா நாமம்.

Advertisement