dinamalar telegram
Advertisement

இந்தியாவுக்கு அஞ்சிய சீனா மின் உற்பத்தி திட்டம் ரத்து

Share
கொழும்பு:இந்தியாவுக்கு பயந்து இலங்கையில் மின் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்கும் திட்டத்தை, சீனா ரத்து செய்துள்ளது.



நம் அண்டை நாடான இலங்கையின் யாழ்ப்பாணம் கடற்கரை பகுதியில் டெல்ப்ட், நாகதீபா மற்றும் அனல்தீவு என மூன்று தீவுகள் உள்ளன.இந்த தீவுகளில் மின் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்க ஜனவரியில் இலங்கை அரசுடன், சீனாவின், 'சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி' என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அந்த மின் உற்பத்தி திட்டத்தை சீன நிறுவனம் தற்போது ரத்து செய்துஉள்ளது.


இதுகுறித்து கொழும்பில் உள்ள சீன துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையின் வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் மின் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்கும் திட்டத்தை, சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி நிறுவனம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. மூன்றாம் தரப்பினரால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையே மாலத்தீவிற்கு சொந்தமான 12 தீவுகளில், சூரிய மின் உற்பத்தி நிலையங்களை கட்டமைக்க, நவ., 29ம் தேதி அந்நாட்டு அரசுடன் சீன அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின் உற்பத்தி திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட டெல்ப்ட், நாகதீபா மற்றும் அனல்தீவு ஆகிய மூன்று தீவுகளும், தமிழகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

  • Nellai Ravi - Nellai,இந்தியா

    அடலேறே, தமிழகத்தின் வீரத்தை எண்ணி ஸ்ரீலங்கா விலிருந்து வெளியேறிருக்கிறார்கள். மாலத்தீவிற்கு வந்திருக்கிறார்கள், தமிழ் வீரர்கள், தனக்கு நிகரான வீரர்களை அருகில் வைத்துகொள்ள விரும்புகிறது, சீன நண்பனே வா, மின்சாரத்தை தா, தமிழகத்திற்கும் வந்திடு, எங்களுடன் சேர்ந்து இந்தி அரக்கிக்கு எதிராக போரிடு...

  • Parthipan - London,யுனைடெட் கிங்டம்

    நெடும்தீவு, நாகதீவு மற்றும் அனலைதீவு. நன்றி

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஹி ஹி ஹி... நடுங்கி ஓடிட்டாங்க.. எட்றா மெடலை.. குத்துடா டில்லி நாட்டாமை மார்லே..

  • நல்லவன் - chennai,இந்தியா

    உண்மையை சொன்னா ஒதுக்கமாட்டிங்க, பரவாயில்லை. பயமெல்லலாம் கிடையாது, மாலத்தீவுல மலிவான விலையில திட்டம் போட்டு இருப்பாங்க... நம்ம ஊரு அரசியல் வியாதிகள் வேணும்னா மாற தட்டிக்கலாம் - மக்களை வழக்கம்போல ஏமற்ற.

  • suresh kumar - Salmiyah,குவைத்

    மாலத்தீவு, கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவுக்கு அருகிலுள்ளது அவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்குமோ என்னவோ

Advertisement