Load Image
Advertisement

இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம்: ராகுல் கோரிக்கை

 இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம்: ராகுல் கோரிக்கை
ADVERTISEMENT



புதுடில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.


டில்லியில் நிருபர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 700 பேர் உயிரிழந்தனர். ஆனால், உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை என மத்திய அரசு சொல்கிறது. உண்மைகளை அரசு மூடி மறைக்கிறது. நிவாரணம் வழங்க விரும்பாததால், பொய் சொல்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான அரசாக உள்ளது.

Latest Tamil News
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 403 பேரின் விவரங்கள் எங்களிடம் உள்ளன. பஞ்சாப் அரசு அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், 152 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை சேர்ந்த 100 பெயர்களின் பட்டியலும் உள்ளது. சந்தேகம் இருப்பின் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் கூடிய பட்டியலை தருகிறேன். ஆனால், போராட்டத்தில் யாரும் உயிரிழக்கவில்லை, அதற்கான தரவுகள் இல்லை என மத்திய அரசு கூறுகிறது. பிரதமர் தவறு செய்துவிட்டதாக கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த தவறு காரணமாக 700 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க தயங்குவது ஏன். விவசாயிகள் உயிரிழப்பிற்கு பஞ்சாப் அரசும், நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (17)

  • Rajamani K - Chennai,இந்தியா

    இறந்தவருக்கு நிவாரணம் கொடுக்க வேண்டுமெனில் அவர் உயிர்ப்பித்து எழ வேண்டும். சரித்திரத்தில் ஒருவர்தான் அதுமாதிரி என்று சொல்கிறார்கள்

  • பேசும் தமிழன் -

    இறந்தவர்கள் அனைவருக்கும் அரசு வேலை.... இத்தாலியில் கொடுக்கிறார்கள்.... வந்துட்டார் இளவரசர் குத்தம் கண்டு பிடிக்க.... உங்கள் பெயரில் காந்தி எப்படி வந்தார் என்பது வரை மக்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டது... உங்கள் பருப்பு இனி வேகாது

  • S. Bharani - singapore,சிங்கப்பூர்

    காங்கிரஸ் கட்சியின் பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியது தானே யார் வேண்டாம் என்று சொன்னது

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    ஏன் காங்கிரஸ், தீயமுக எல்லாரும் குடுக்கலாமே? எதுக்கு tax payers money? கீசோறுக்கு கொட்டி கொடுத்த பணத்தில் 10% கூட இருக்காது

  • ராஜா -

    அவர்கள் விவசாயிகள் என்பதற்கு ஆதாரம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். மக்கள் வரி்ப்பணத்தை அரசு வீணாக்கக்கூடாது. அதில் தீவிரவாதிகள் இருந்தால் இந்த போராட்டத்தை ஆதரித்த அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகள் விசாரணைக்கு உட்பட்டு தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement